Last Updated:
உலகளவில் அதிக காப்புரிமை தாக்கல் செய்த முதல் 20 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நிறுவனம் ஜியோ மட்டுமே ஆகும்.
இது தொடர்பாக ஆகாஷ் அம்பானி தெரிவித்ததாவது-
“இன்று, நாங்கள் எங்கள் மொபைல் தளத்தில் கிட்டத்தட்ட 31.4 கோடி (314 million) புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கக்கூடிய ஒரு பெரும் வாய்ப்பைக் காண்கிறோம்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் வயது வரம்பை எட்டும் சுமார் 10 கோடி இந்தியர்கள் முதன்முறையாக சிம் கார்டைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம், அதே நேரத்தில் தற்போது 2G நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் 24 கோடி சந்தாதாரர்கள் 4G மற்றும் 5G சேவைகளுக்கு மாறலாம்.
மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எங்களது பிராட்பேண்ட் நெட்வொர்க்கின் புதிய இணைப்புகளில் 40 சதவீதம் பேர் பெரிய நகரங்களுக்கு வெளியிலிருந்து வருகிறார்கள்.
19 மாதங்களுக்குள் நாங்கள் இந்தியாவின் 99 சதவீத மக்கள்தொகுதியைச் சென்றடைந்தோம். 12 மணி நேர வேலை நாளில் நாங்கள் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு டவரை அமைத்துக் கொண்டிருந்தோம்.
எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பாக சேவை செய்ய நாங்களே எங்களது சொந்த தொழில்நுட்பத்தை உருவாக்கினோம். இது வெறும் புதுமைக்காகச் செய்யப்படும் விஷயம் அல்ல; இது எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த மதிப்பை வழங்குவதற்கான புதுமையாகும்.
இன்று நாங்கள் வழக்கமாக எங்களது உரிமம் பெற்ற சேவைகளுக்கு எதிராக ARPU-வை (ஒரு பயனருக்கான சராசரி வருவாய்) கணக்கிடுகிறோம், ஆனால் உரிமம் பெற்ற வணிகங்களுக்கு வெளியேயும் எங்களால் அதிக லாபத்தைப் பெற முடியுமா என்று தீவிரமாக யோசித்து வருகிறோம்.
ஜியோவின் நோக்கம் மிகவும் எளிமையானது. ஒவ்வொரு இந்திய வீட்டையும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும், ஒவ்வொரு இந்திய நிறுவனத்தையும் மிக உயர்ந்த தரம் மற்றும் மிகவும் மலிவு விலையிலான டிஜிட்டல் சேவைகளுடன் இணைப்பதே ஜியோவின் நோக்கமாகும்.” என்று தெரிவித்தார்.


