Last Updated:
சென்னை அணியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இடம் பெறுவார் என தகவல்கள் கடந்த சில வாரங்களாக பரவி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படும் நிலையில், அவர் அளித்துள்ள பதில் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக எம்.எஸ். தோனி செயல்பட்டு வருகிறார். நடப்பு சீசனில் சென்னை அணி எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக இந்த முறை பத்தாவது இடத்தில் சென்னை அணி நிறைவு செய்திருந்தது.
இதற்கிடையே சென்னை அணியின் கேப்டன் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளிவந்தன. சென்னை அணியின் கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் காயம் காரணமாக போட்டித் தொடரில் இருந்து விலகினார். இதற்கிடையே சென்னை அணியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இடம் பெறுவார் என தகவல்கள் கடந்த சில வாரங்களாக பரவி வருகிறது.
அவரை டிரேடு முறையில் அணியில் சேர்ப்பதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த தகவல்களை சஞ்சு சாம்சன் இதுவரை மறுக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தோனி பங்கேற்று இருந்தார். அதில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், என்னுடைய முழங்கால் வலியை யார் பார்த்துக் கொள்வது என்று நகைச்சுவை உணர்வோடு கேட்டார். இதனால், தோனி முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
August 12, 2025 1:45 PM IST


