2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில், 4 வீரர்களை மட்டுமே ஒரு அணியில் தக்கவைக்கும் வகையில் விதிகள் வகுக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு முன்பாக வீரர்களுக்கான மெகா ஏலம் நடக்கவுள்ளது. இந்த மெகா ஏலத்தில் பல வீரர்கள் வேறு அணிக்கு மாற வாய்ப்பு உள்ளது.
இதுவரை 5 வீரர்கள் வரை ஓர் அணியில் தக்கவைக்கலாம் என விதிமுறை இருந்தது. 3 வீரர்களை ஏலம் நடப்பதற்கு முன்பாகவே தக்கவைக்கப்படுவர். மேலும் 2 வீரர்களை ரைட் டூ மேட்ச் என்ற விதியின் மூலம் அதே அணியால் வாங்கமுடியும் என்ற வகையில் தக்கவைப்புகள் நிகழ்ந்து வந்தன.
இதையும் படிக்க:
“கோலி, ரோகித், பாண்டியா அவமதித்தார்கள்” – உடைத்துச் சொன்ன தினேஷ் கார்த்திக்!
இந்நிலையில் இம்முறை, ஓர் அணி 3 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என விதிகளில் மாற்றம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், ரைட் டூ மேட்ச் எனப்படும், வேறு அணியால் வாங்கப்பட்ட வீரரை அதே தொகைக்கு திரும்ப வாங்கிக்கொள்ளும் முறைப்படி ஒரு வீரரை அணியில் வைத்துக்கொள்ளலாம் என்ற வகையிலும் மாற்றம் நிகழலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தையின்போது, ஒவ்வொரு அணியும் 6 வீரர்களைத் தக்கவைக்கும் வகையில் மாற்றம் கொண்டுவரலாம் என சில அணி நிர்வாகத்தினர் கருத்து தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் அவ்வாறு செய்தால் ஏலத்துக்கு உண்டான சிறப்பம்சமே கெட்டுப்போய்விடும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற ஃபார்மேட் கிரிக்கெட்டுகளை விட ஐபிஎல் தொடரை ரசிகர்கள் திருவிழாவை போல கொண்டாடி வருவதால், இந்த விதி மாற்றம் குறித்தும், தங்களுக்கு பிடித்த அணியில் யார் விளையாடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)