• Login
Sunday, October 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அடுத்தடுத்த நாள்களில் சென்னை வரும் மோடி, ராகுல் காந்தி… பயணத் திட்டம் என்ன? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 11, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
அடுத்தடுத்த நாள்களில் சென்னை வரும் மோடி, ராகுல் காந்தி… பயணத் திட்டம் என்ன? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ஒரு நாள் பயணமாக அக்டோபர் 10-ம் தேதி சனிக்கிழமை சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் பகல் 12.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் அவருக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படும் ராகுல் காந்தி, கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலுக்குச் சென்று ஓய்வெடுக்கிறார். பின்னர் மாலையில் சென்னை தீவுத்திடலில் நடைபெறும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்துக்குச் செல்லும் ராகுல் காந்தி, அன்று இரவே விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வருகை தருகிறார். அன்று காலை 10.55 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் அவர், காலை 11 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு 11.20 மணிக்கு பூந்தமல்லி ஹெலிபேடைச் சென்றடைகிறார்.

அங்கிருந்து சாலை வழியாக பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்லும் பிரதமர், பூந்தமல்லி – வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, மெட்ரோ ரயிலில் போரூர் வரை பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மதியம் 12.25 மணிக்கு சென்னை ஐஐடி வளாகத்துக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்குள்ள மூளை அறிவியல் மையத்தைப் பார்வையிடுகிறார். இதைத்தொடர்ந்து, 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கலந்துரையாடுகிறார்.

பிற்பகல் 1.55 மணி முதல் 3.15 மணி வரை கிண்டி வித்யாலயா மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். அப்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத் திட்டத்தைத் தொடங்கி வைப்பதுடன், பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், கோவை சங்கரா கண் மருத்துவமனையின் பொன்விழா கொண்டாட்டம், பிரெயின் அட்லஸ் அறிவிப்பு நிகழ்வு ஆகியவற்றிலும் பங்கேற்கிறார். இதே நிகழ்ச்சியில் இளையராஜா இசைத் திறன் மையத்தின் தொடக்க நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

பிற்பகல் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, மாலை 3.30 மணிக்கு ஜலந்தீஸ்வரர் சிவன் கோயிலில் பிரதமர் மோடி சிறப்புப் பூஜை மேற்கொள்கிறார். பின்னர், மாலை 4 மணிக்கு சென்னை கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் விழாவில் பங்கேற்கிறார்.

நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலை 5.15 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்றடையும் பிரதமர், மாலை 5.20 மணிக்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்படுகிறார்.

Read More

Previous Post

உக்ரைனை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 20 பேர் பலி

Next Post

சிலியில் சேறு கலந்த வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட கார்கள்; வைரலான வீடியோ… | Makkal Osai

Next Post
சிலியில் சேறு கலந்த வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட கார்கள்; வைரலான வீடியோ… | Makkal Osai

சிலியில் சேறு கலந்த வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட கார்கள்; வைரலான வீடியோ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin