Last Updated:
சட்டவிரோத துப்பாக்கிகள், கும்பல்களுக்கு இடையேயான மோதல்கள், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் உள்ளூர் தொழில் தொடர்பான தகராறுகள் இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஜோகன்னஸ்பர்க் அருகே வெடேலா பகுதியில் உள்ள மதுபான விடுதிக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த 8 பேர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, கேப் டவுன் அருகே லவுண்டில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்தது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. சில நாட்களுக்கு முன்பு, அந்நாட்டின் டர்பன் நகரில் வீட்டில் கூடியிருந்தவர்களை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சட்டவிரோத துப்பாக்கிகள், கும்பல்களுக்கு இடையேயான மோதல்கள், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் உள்ளூர் தொழில் தொடர்பான தகராறுகள் இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.


