• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அடுத்தடுத்து நடந்த அந்த 3 சம்பவம்… ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏன்? – காரணம் இதுதானா?

GenevaTimes by GenevaTimes
July 23, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அடுத்தடுத்து நடந்த அந்த 3 சம்பவம்… ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏன்? – காரணம் இதுதானா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 23, 2025 6:44 AM IST

தனது உடல்நிலையை காரணம் காட்டி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர், ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவதாக தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜெகதீப் தன்கர்ஜெகதீப் தன்கர்
ஜெகதீப் தன்கர்

துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்ட நிலையில், இரண்டு மாதங்களுக்குள் புதிய குடியரசுத் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 74 வயதான ஜெகதீப் தன்கர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்றார். மாநிலங்களவையின் தலைவராகவும் இருந்து வந்த அவர், இன்னும் 2 ஆண்டு பதவிக்காலம் இருக்கும் நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

இதன்மூலம் குடியரசுத் தலைவர் தேர்தல் அல்லாத வேறு காரணங்களுக்காக பதவி விலகிய முதல் குடியரசுத் துணைத் தலைவராக தன்கர் உள்ளார். மாநிலங்களவைத் தலைவர் என்ற முறையில் எதிர்க்கட்சிகளுக்கும், குடியரசுத் துணைத் தலைவருக்கும் ஆன மோதல்போக்கு வழக்கமானதுதான் என்றாலும் எதிர்க்கட்சிகளுடனான தன்கரின் அணுகுமுறை மிகவும் விமர்சனத்திற்குள்ளானது. 2024 டிசம்பரில், தன்கர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்தன.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு குடியரசுத் துணைத் தலைவர் மீது இவ்வாறு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது அதுவே முதல் முறை. இந்த நிலையில், தனது உடல்நிலையை காரணம் காட்டி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர், ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவதாக தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க தீர்மான கடிதத்தை மத்திய அரசுக்கு தெரியாமல் விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட விவகாரத்தால் குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால், அதற்கு முன்பாகவே எதிர்க்கட்சிகள் இந்த தீர்மானத்தை மாநிலங்களவையில் கொண்டு வந்தன. அதனை ஜெகதீப் தன்கர் ஏற்றுக் கொண்டதால் அவர் மீது மத்திய அரசு அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்தே ஜெகதீப் தன்கர், முன் அனுமதி பெறாமலேயே திடீரென்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியதாகத் தெரிகிறது.

மேலும் கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை தன்கர் சந்தித்தனர். எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தன்கர் நெருக்கம் காட்டியதையும் மத்திய அரசு தரப்பு விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று நீதித்துறையில் ஊழலை ஒழிக்க தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் போன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தன்கர் பேசியதும் மத்திய அரசு விரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

July 23, 2025 6:42 AM IST

Read More

Previous Post

சற்றுமுன் துப்பாக்கிச்சூடு : பெண் மரணம்

Next Post

தங்கத்தின் விலை கடந்த 6 ஆண்டுகளில் எத்தனை சதவீதம் உயர்ந்துள்ளது தெரியுமா…? வெளியான ஷாக் ரிப்போர்ட்…

Next Post
தங்கத்தின் விலை கடந்த 6 ஆண்டுகளில் எத்தனை சதவீதம் உயர்ந்துள்ளது தெரியுமா…? வெளியான ஷாக் ரிப்போர்ட்…

தங்கத்தின் விலை கடந்த 6 ஆண்டுகளில் எத்தனை சதவீதம் உயர்ந்துள்ளது தெரியுமா...? வெளியான ஷாக் ரிப்போர்ட்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin