Last Updated:
ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தில் 6.7, 5 மற்றும் 7.4 ரிக்டர் அளவிலான மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கம்சட்கா பிராந்தியத்தில், இன்று மட்டுமே அடுத்தடுத்து, 6.7, 5 மற்றும் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டது.
கம்சட்கா பிராந்தியத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதில் அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 7.4 அலகுகளாக பதிவானது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது.
அடுத்தடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கியது. இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் கட்டடங்களைவிட்டு, உடனடியாக வெளியேறி சாலைக்கு வந்தனர். மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.
கம்சட்கா பிராந்தியத்தின் பெட்ரோபாவ்லோஸ்க் நகரில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது வரை பாதிப்பு குறித்தான எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
July 20, 2025 4:11 PM IST
அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் நிலநடுக்கங்கள்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி… ரஷ்யாவில் நடந்த பயங்கரம்


