பொரளையில் 24 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அவர் பொரளை – சர்ப்பன்டைன் வீதியில் வசிக்கும் சிறுமியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி மன உளைச்சல் காரணமாக சில காலமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக சிறுமியின் தாயார் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளத.
எனினும் சிறுமி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்தாரா அல்லது தவறி விழுந்தாரா என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02

