காஜாங்கில் இந்த மாத தொடக்கத்தில் அவரது அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து இறந்த 23 வயதான தொழில் நுட்ப பணியாளர் கைருல் நஸ்ரின் இட்ரிஸின் மரணத்தின் பின்னணியில் குற்றவியல் கூறுகள் இருப்பதாக குடும்பம் நம்புகிறது. அவரது மூத்த சகோதரி நடாஷா ஃபயர்ன் இட்ரிஸ் 31, கெய்ருலின் வழக்கை திடீர் மரணம் என்று வகைப்படுத்துவதற்கு குடும்பத்தினர் அதிருப்தி தெரிவிப்பதோடு காவல்துறை மேலும் விசாரிக்க விரும்புவதாக தெரிவித்தார்.
குடும்பத்தின் சார்பாக பேசிய நடாஷா, ஜூன் 8 அன்று பிளாசா இன்டா பி6 அடுக்குமாடி குடியிருப்பில் விழுந்து இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கைருல் தனது மனைவிக்கு போன் செய்ததாக கூறினார். கைருலின் மனைவி லைனில் இருந்தபோது, ஒரு வாக்குவாதம் நடப்பதைக் கேட்டதாகவும், கைருல் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் அவர் கூறினார். சம்பவத்தின் போது, அவர் தனது மனைவியை அழைத்தார். ஆனால் எதுவும் பேசவில்லை. அவரது மனைவி ஒரு ஆடவர் (கைருல் அல்ல) மற்றும் மற்றொரு பெண்ணின் குரல்களைக் கேட்டதாக அது தனக்கு பதட்டத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார். அந்த ஆடவர் கைருலிடம் நீ இங்கே வா மேலே செல்லலாம் என்று அழைத்ததை கேட்க முடிந்ததாகத் தெரிவித்தார்.
சிறிது நேரம் கழித்து, போன் அமைதியாகிவிட்டது என்று நடாஷா கூறினார். பின்னர் கைருலின் மனைவி வீட்டிற்கு விரைந்தார். அங்கு அவர் அடுக்குமாடி கட்டிடத்தின் தரையில் தலையில் கணவர் இரத்தப்போக்குடன் அசையாமல் கிடப்பதைக் கண்டார். தெரியாத நபர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அவர்களது பக்கத்து வீட்டுக்காரர்களும் கேட்டதாக நடாஷா கூறினார். கைருலின் மரணம் குறித்து மேலும் விசாரணை நடத்துமாறு அவர் காவல்துறையிடம் முறையிட்டார். அவருக்கு தனிப்பட்ட பிரச்சனைகள் எதுவும் இல்லாததால் அவர் கட்டிடத்தில் இருந்து குதித்திருக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.
நாங்கள் அவருக்கு நீதி கேட்கிறோம். நாங்கள் பொது மக்களில் ஒருவர் என்பதாக் எந்த சாட்சிகளையும் ஒத்துழைக்க கட்டாயப்படுத்த முடியாது. எனவே போலீசார் வழக்கை மீண்டும் விசாரிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார். கைருல் நான்கு உடன்பிறப்புகளில் மூன்றாவது. அவருக்கு மனைவியும், ஒன்பது மாத பெண் குழந்தையும் உள்ளனர். ஒரு அறிக்கையில் காஜாங் போலீசார், அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து விழுந்த ஒரு நபர் காரின் பின்புற கண்ணாடியில் இறந்து கிடந்தது குறித்து தங்களுக்கு ஒரு துயர அழைப்பு வந்ததாகக் கூறியுள்ளனர்.
அப்போதைய காஜாங் காவல்துறைத் தலைவர் ஜெய்த் ஹாசன், தடயவியல் குழுவின் முதற்கட்ட விசாரணையில் குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டது என்றார். புதிதாக நியமனம் பெற்றுள்ள காஜாங் காவல்துறைத் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோப்பைத் தொடர்பு கொண்டபோது, வழக்கின் முன்னேற்றங்கள் இன்னும் நிலுவையில் உள்ளது என்றார்.


