கோலாலம்பூர்:
செராஸ் பகுதியில் உள்ள மக்கள் வீட்டுத் திட்ட (PPR) அடுக்குமாடி குடியிருப்பொன்றில் 14 வயது சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகக் காவல்துறைக்கு முறையீடு கிடைத்துள்ளதாக மலேசியக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்துச் சிறுவனின் தாயார் கடந்த செப்டம்பர் 29-ஆம் திகதி புகாரளித்துள்ளதாகச் செராஸ் துணைப் போலீஸ் அதிகாரி சுப்ரண்டண்ட் லிம் சுன் ஹோ தெரிவித்துள்ளார்.
40 வயதுடைய நபர் ஒருவர், பாதிக்கப்பட்ட சிறுவனை அவனது வீட்டிலேயே வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இச்சம்பவம் தொடர்பாகக் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் பாலியல், பெண்கள் மற்றும் சிறுவர்கள் புலனாய்வுப் பிரிவினர் (D11) தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



