யாரெல்லாம் ஜிஎஸ்டி கட்ட வேண்டும்?
ஒரு குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தின் (RWA) ஆண்டு வருவாய் ரூ.20 லட்சத்தை கடந்து, ஒரு தனிநபர் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் மாதத்திற்கு ரூ.7,500 க்கு மேல் பராமரிப்பு கட்டணமாக செலுத்தினால், அந்த முழு பராமரிப்புத் தொகைக்கும் 18% ஜிஎஸ்டி பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
அதாவது, ஒரு குடியிருப்பு உரிமையாளர் பராமரிப்பு தொகையாக ரூ.9000 செலுத்தி வந்தால், அதற்கான 18% ஜிஎஸ்டி தொகையாக ரூ.1620 உடன் மொத்தமாக ரூ.10,620 செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு என்ன சொல்கிறது?
ஜனவரி 2018 இல் நடந்த 25வது கூட்டத்தில், ஜிஎஸ்டி கவுன்சில் RWA கள் மற்றும் வீட்டுவசதி சங்கங்களுக்கு பயனளிக்கும் வகையில் வரி விலக்கு வரம்பை ரூ.5,000-யிலிருந்து ரூ.7,500 ஆக உயர்த்தியது.
நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் கொடுத்த விளக்கத்தின்படி, ஒரு நிதியாண்டில் ஒரு RWAவின் மொத்த வருவாய் ரூ.20 லட்சத்தை தாண்டவில்லை என்றால், குடியிருப்பு உரிமையாளர் பராமரிப்பு கட்டணங்கள் மாதத்திற்கு ரூ.7,500ற்கு மேல் கட்டினாலும், அந்த RWA-வை பதிவு செய்து GST செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், RWA-கள் ஜெனரேட்டர்கள், வாட்டர் பம்புகள் போன்ற மூலதனப் பொருட்களுக்கும், பைப்புகள், மற்ற பொருட்கள் உள்ளிட்ட உள்ளீட்டு சேவைகளுக்கு செலுத்தும் GST இன் உள்ளீட்டு வரி வரவைப் பெற உரிமை உண்டு என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க: தங்கம் விலை ரூ.1 லட்சம் வரை உயருமா அல்லது 30% குறையுமா..? பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன?
குடியிருப்புவாசிகள் என்ன செய்ய வேண்டும்?
குடியிருப்புவாசிகள் தங்கள் RWA GST இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். அத்துடன், தங்கள் வீட்டுவசதி சங்கத்தின் ஆண்டு வருவாய் புள்ளிவிவரங்களை மதிப்பாய்வு செய்து, உள்ளீட்டு வரிக் கடன் சலுகைகளை RWA களுடன் விவாதிக்க வேண்டும்.
இது அரசு கூறும் வரம்பிற்குள் வருமானால் நிச்சயம் ஜி.எஸ்.டியை செலுத்த வேண்டும்.
April 13, 2025 1:02 PM IST
அடுக்குமாடி குடியிருப்புவாசிகளே உஷார்..! இனி ஜி.எஸ்.டி கட்ட வேண்டும் – வெளியான முக்கிய தகவல்

