Last Updated:
தெலங்கானா மாநிலம் பத்ராச்சலத்தில் 2 மாடி கட்டடத்தின் மேல் 4 மாடிகள் கட்ட முயன்றபோது கட்டடம் இடிந்து விழுந்து 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இரண்டு மாடி கட்டடத்தின் மேல் மேலும் 4 மாடிகளை கட்ட முயன்றபோது ஏற்பட்ட விபத்தில், கட்டிடத் தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம், பத்ராச்சலம் நகரின் பஞ்சாயத்து ராஜ் அலுவலகம் அருகே 2 மாடி கட்டடம் ஒன்று இருந்தது. அந்தக் கட்டடத்தின் மீது மேலும் 4 மாடிகளை கட்ட உரிமையாளர் திட்டமிட்ட நிலையில், அதற்கான கட்டுமானப் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பழைய கட்டடம் என்பதால் புதிய கட்டுமானப் பணியால் மேலும் வலுவிழந்து சரசரவென சரிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் கட்டுமானத் தொழிலாளர்கள் 7 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் : ராஜபுத்திர மன்னர் குறித்து சர்ச்சை கருத்து.. சமாஜ்வாதி எம்.பி. வீட்டின் மீது பயங்கர தாக்குதல்
இடிபாடுகள் அப்புறப்படுத்தப்பட்டு நீண்ட முயற்சிக்குப் பிறகு, தொழிலாளர்கள் 7 பேரையும் உயிரற்ற சடலமாகவே மீட்க முடிந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
March 26, 2025 10:19 PM IST


