இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், ஜூன் 11ஆம் தேதி அன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, M.L.A தலைமையில் கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான M.R. விஜயபாஸ்கர் அவர்கள் முன்னிலையில் நடைபெறும். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி அன்போடு கேட்டுக்கொண்டுள்ளார்.

