கட்சியின் தேசிய மாநாட்டில் அடித்தட்டு மக்கள் எழுப்பிய விமர்சனங்களையும் கருத்துக்களையும், அதன் தகவல் தொடர்பு மற்றும் பொது தகவல் உத்திகளை வலுப்படுத்துவதற்கான கோரிக்கைகள் உட்பட, பிகேஆர் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது.
மக்களின் இந்த கருத்துக்கள் கட்சி இயந்திரத்தை வலுப்படுத்தவும், அதன் தகவல் தொடர்பு உத்தியை மறுபரிசீலனை செய்யவும் உதவும் என்று அதன் தகவல் பிரிவு தலைவர் பாமி பட்சில் கூறினார்.
கட்சி இயந்திரத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்காக, நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய மற்றும் பரிசீலிக்க வேண்டிய பல விமர்சனங்களும் விஷயங்களும் இதில் உள்ளன.
தகவல் தொடர்பு மற்றும் தகவல் உத்திகளை மாற்றி அமைப்பதும் இதில் அடங்கும், என்று இங்கு நடைபெற்ற தேசிய மாநாட்டில் உள்ள ஊடக அறைக்குச் சென்ற பிறகு அவர் கூறினார்.
அடித்தட்டு மக்களின் கருத்துக்களைக் கேட்டு, மாற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பதன் மூலம் கட்சியின் தலைமை ஒரு பணிவான அணுகுமுறையைக் கையாண்டு வருவதாக பாமி கூறினார்.
மேக்ரோ பொருளாதார அளவில் (பேரியல் பொருளாதாரம்) அரசாங்கம் அடைந்துள்ள சாதனைகள், இன்னும் சாதாரண மலேசியர்கள் உணரும் வகையிலான மேம்பாடுகளாக மாறவில்லை என்பதே எழுப்பப்பட்ட முக்கிய கவலைகளில் ஒன்று.
பொதுமக்களுக்குத் தகவல்களைத் தெரிவிக்கும் முறையை மேம்படுத்துவதற்கான பல நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு வருவதாகவும், நாளை நடைபெறும் மாநாட்டின் நிறைவு அமர்வின் போது அவை விரிவாக விளக்கப்படும்.
பக்காத்தான் ஹராப்பானின் தகவல் தொடர்பு இயக்குநராகவும் இருக்கும் பாமி, பொதுமக்களை அதிகம் பாதிக்கும் பிரச்சினைகளைக் கண்டறிந்து, மேல் நடவடிக்கைக்காக அவற்றைச் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குக் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குவதும் இதில் அடங்கும் என்று கூறினார்.
-fmt
