Last Updated:
Ajit Pawar | விமான விபத்துக்கு முன்பாக காக்பிட்டில் விமானிகள் பேசிக் கொண்ட ஆடியோ பதிவுகள் ஆய்வு செய்யப்படும் என்றும் டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
விமானத்தின் சிதறிய பாகங்களை வைத்து எந்த திசையில் மற்றும் வேகத்தில் விமானம் சென்றது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (Directorate General of Civil Aviation (DGCA) India) தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்தமாநிலத்தின் துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார், லியர்ஜெட் 45 என்ற சிறிய ரக விமானத்தில் மும்பையில் இருந்து பாராமதிக்கு சென்றார்.
பாராமதி விமான நிலையத்தில் அந்த விமானத்தை தரையிறக்க விமானி முயற்சித்த போது பழுது ஏற்பட்டதாக தெரிகிறது. அதனால் விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்கியபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் எரிபொருள் அதிகம் இருந்த நிலையில் உடனடியாக தீப்பற்றியது.
விமானத்தின் சிதறிய பாகங்களை வைத்து எந்த திசையில் மற்றும் வேகத்தில் விமானம் சென்றது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (Directorate General of Civil Aviation (DGCA) India) தெரிவித்துள்ளது. மேலும் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அந்த விமானம் பயன்படுத்த தகுதியானதாக இருந்ததா என்பது குறித்தும் அதன் பராமரிப்பு தரவுகள் குறித்தும் ஆராயப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mumbai,Maharashtra
Ajit Pawar | அஜித் பவார் சென்ற விமான விபத்து : சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கொடுத்த விளக்கம்


