Last Updated:
அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்ததால், சுனேத்ரா பவார் மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக மும்பையில் பதவியேற்றார்.
விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்.
மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் நிகழ்ந்த விமான விபத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில துணை முதலமைச்சருமான அஜித் பவார் மரணமடைந்தார். இதனால், அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் துணை முதலமைச்சராக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் ஒருமனதாக தேர்வு கோரிக்கை விடுத்ததால், அதை அவர் ஏற்றார்.
இதையடுத்து, மும்பை லோக் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில், சுனேத்ரா பவாருக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சுனேத்ரா பவார் துணை முதலமைச்சராகியிருப்பதால், அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்ற உறுப்பினராக வேண்டியது அவசியமாகியுள்ளது. எனினும், மகாராஷ்டிர சட்டமன்றத்தின் மேலவை உறுப்பினராக சுனேத்ரா பவார் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் பவாரின் மனைவி.. மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார் சுனேத்ரா பவார்!


