Last Updated:
காம்பா எனர்ஜி (Campa Energy), அஜித் குமார் கார் ரேசிங் அணியின் ‘அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக’ செயல்படும்.
அஜித்தின் கார் ரேஸ் நிறுவனத்துடன் RCPL எனப்படும் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிட்டெட் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது.
நடிகர் அஜித் குமார் சினிமா படங்களில் நடிப்பதுடன் கார் ரேஸ்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அஜித் குமார் ரேசிங் என்ற நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ள அவர், அதன் மூலமாக குழுக்களை அமைத்து சர்வதேச கார் பந்தய போட்டிகளில் பங்கெடுத்து வருகிறார்.
2025 கிரெவென்டிக் 24ஹெச் ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் ஒட்டுமொத்தமாக P3 மூன்றாவது இடத்தை பிடித்து அஜித்குமார் ரேசிங் அணி சாதனை படைத்தது.
இதேபோன்று ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் பொருட்கள் நிறுவனம் உலகத் தரம் வாய்ந்த பொருட்களை குறைந்த விலையில் இந்திய வாடிக்கையாளர்கள் வாங்கும் விதத்தில் சேவைகளை செய்கிறது.
இந்நிலையில் அஜித் குமார் ரேசிங் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிட்டெட் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது. RCPL-இன் முதன்மையான எனர்ஜி டிரிங்க் பிராண்டான காம்பா எனர்ஜி (Campa Energy), அஜித் குமார் கார் ரேசிங் அணியின் ‘அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக’ செயல்படும்.
இந்த பார்ட்னர்ஷிப், காம்பா எனர்ஜி மற்றும் அஜித் குமார் ரேசிங் ஆகிய இரு நிறுவனங்களின் மதிப்புகளான உறுதிப்பாடு, தாங்குதிறன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது.
இதுபற்றி ரிலையன்ஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இன்றைய இளைஞர்களின் ‘எப்போதும் விட்டுக்கொடுக்காத மனப்பான்மையை’ இந்த பார்ட்னர்ஷிப் பிரதிபலிக்கிறது. காம்பா எனர்ஜி, உலகளாவிய பந்தயத் தளத்தில் சிறந்து விளங்குவதற்கான அணியின் தேடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு, அஞ்சாத சாதனையாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
November 12, 2025 5:44 PM IST


