நிவாரண நிதி அளிப்பு
இதைத்தொடர்ந்து அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அரசின் நிவாரண நிதிக்கான ரூ. 7.50 லட்சம் காசோலையை கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தலைமையில், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில், அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் சென்று நிவாரண தொகை வழங்கி, அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

