Last Updated:
அசீம் முனீருக்கு பெரும் அதிகாரம் வாரி வழங்க பாகிஸ்தான் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் முப்படைகளின் தலைமை தளபதியாக அந்நாட்டு ராணுவ தளபதி அசீம் முனீருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் பிரதமரை விட அந்நாட்டில் சக்திவாய்ந்தவராக ராணுவ தளபதி அசீம் முனீர் இருந்து வருகிறார். அந்நாட்டு பிரதிநிதியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பையும் அவர் சமீபத்தில் சந்தித்தார்.
இந்நிலையில் அந்நாட்டின் முதல் முப்படை தளபதியாக அசீம் முனீர் நியமிக்க வழிவகை செய்யும் விதமாக பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ராணுவ தளபதி, விமானப் படை தளபதியை பிரதமரின் பரிந்துரையின்படி குடியரசுத்தலைவர் நியமிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் முப்படை தலைமைத் தளபதி அசீம் முனிரின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேசிய போர் வியூக அமைப்பின் தலைவரை பிரதமருடன் இணைந்து முப்படைகளின் தளபதி நியமிக்கவும் புதிய திருத்தம் வழிவகுத்துள்ளது.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு ஃபீல்ட் மார்ஷலாக தரம் உயர்த்தப்பட்ட அசீம் முனீருக்கு தற்போதைய சட்டத்திருத்தம் முப்படைகள் மீதான முழு அதிகாரத்தைத் தந்துள்ளது. பீல்டு மார்ஷலாக இருப்பவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த பதவியில் இருக்கும் வகையிலும் சட்டத் திருத்தத்தில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
வரும் 27ஆம் தேதி முப்படைகளின் கூட்டு கமிட்டியின் தலைவரின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், முப்படைகளும் அசீம் முனீருக்கு கீழ் வரும் என்பதால் அவர் கூடுதல் அதிகாரம் அதிகரித்துள்ளது.
November 09, 2025 9:46 PM IST
அசீம் முனீருக்காக பாகிஸ்தான் அரசியல் அமைப்பில் திருத்தம்! வாரி வழங்கப்படும் அதிகாரம்


