Last Updated:
அசாம் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 100 இடங்களில் வென்று, ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தொடருகிறது.
அசாம் மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் அசாம் மாநிலத்தில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தம் 126 தொகுதிகள் கொண்ட அசாம் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க 64 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
இந்தச் சூழலில், 126 இடங்களில் போட்டியிட்ட ஆளும் பாஜக கூட்டணி, மாலை 6 மணி நிலவரப்படி 100 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இரண்டு தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக பாஜக மட்டும் 90 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், 80 இடங்களில் வென்றுள்ளது.
மாநிலத்தில் பாஜகவுக்கு நேரடி போட்டியாக இருந்த காங்கிரஸ் கூட்டணி 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் மட்டும் 15 இடங்களில் வென்றுள்ளது.
இதன் மூலம், அசாம் மாநிலத்தில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது.

