வடகிழக்கு மாநிலமான அசாமில் கால்நடைப் பாதுகாப்புச் சட்டத்தை மீறி, பசுவதை செய்ததாக சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக கால்நடைகள் பலியிடப்படுவதாகவும், பல உணவகங்களில் உரிய அனுமதியின்றி மாட்டிறைச்சி விற்பனைச் செய்யப்படுவதாகவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அசாமின் அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறையினர் நேற்று (ஜூலை 1) முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (ஜூலை 2) வரை இரண்டு நாள்களாக 178 உணவகங்கள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் ஆகியவற்றில் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.