Last Updated:
அசாமில் கலியாபோரில் பிரதமர் நரேந்திர மோடி 6950 கோடி ரூபாய் மதிப்பில் காசிரங்கா திட்டம், அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகள் தொடக்கம் செய்தார்.
அசாமின் அடையாளத்தை சிதைக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கலியாபோரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் சுமார் 6 ஆயிரத்து 950 கோடி ரூபாய் மதிப்பில் வனவிலங்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காசிரங்கா உயர்மட்டப் பாதை திட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
மேலும், கவுஹாத்தியின் காமக்யா – ரோட்டக் மற்றும் திப்ருகர் – லக்னோ கோமதி நகர் இடையே இரண்டு அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகளை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றி பிரதமர் மோடி, பாஜக மீதான மக்களின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரிப்பதை, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாக கூறினார். அசாமில் ஊடுருவலுக்கு எதிரான போரையும் உள்கட்டமைப்பு மேம்பாட்டையும் ஒருங்கே பாஜக மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.


