Last Updated:
100% Tariff on Drugs | டொனால்டு டிரம்ப் அக்டோபர் 1 முதல் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மருந்து பொருட்களுக்கு 100 விழுக்காடு வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். அதேபோல ஃபர்னிச்சர் பொருட்களுக்கும் 30 விழுக்காடு வரி வசூலிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் மருந்து பொருட்களுக்கு 100 விழுக்காடு வரி விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஏற்கெனவே 25 விழுக்காடு வரி மற்றும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் 25 சதவிகிதம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100 விழுக்காடு வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதன் மூலம், இந்தியாவின் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்தாண்டு 31 ஆயிரத்து 626 கோடி மதிப்பிற்கு மருந்துகளை ஏற்றுமதி செய்த இந்தியா, நடப்பாண்டு 6 மாத காலகட்டத்தில் மட்டுமே 32 ஆயிரத்து 505 கோடி அளவிற்கு மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் உற்பத்தி ஆலை வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்த வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மருந்துகள் மட்டுமின்றி சமையலறை மற்றும் கழிவறை உபகரணப் பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கனரக லாரிகளுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் தனது சமூக வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
September 26, 2025 9:18 AM IST
Tariff | அக்.1 முதல் அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் மருந்துப் பொருட்களுக்கு 100 % வரி…. அதிபர் டிரம்ப் அறிவிப்பு


