அக்னிபாத் திட்டத்தின் நடைமுறை விதிகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படுபவர்களில் 75 முதல் 80 சதவிகிதம் பேர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவத்தில் பணியாற்ற இயலாது. இந்த நடைமுறையை மாற்றி 60 முதல் 70 சதவிகித வீரர்களை ராணுவத்தில் தக்க வைத்துக் கொள்ளலாம் என்கிற மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
இதனிடையே, அக்னிபாத் திட்டத்தில் தொழில்நுட்ப பிரிவு வீரர்களின் ஓய்வு வயதை 21ல் இருந்து 23 ஆக உயர்த்தவும், பணி காலத்தை 7 முதல் 8 ஆண்டுகளாக உயர்த்தவும் இந்திய ராணுவம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போரின் போது உயிரிழக்கும் அக்னி வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கவும் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஆலோசனைக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அக்னிபாத் திட்ட நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
