Last Updated:
அக்டோபர் மாதத்தில், ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லூகோயில் ஆகியவற்றுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்தது.
அக்டோபர் மாதத்தில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் அதிகம் வாங்கிய நாடுகளின் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது.
மற்ற நாடுகளை விடவும் ரஷ்யாவிடம் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யலாம் என்பதால் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கிறது.
ரஷ்ய எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குவதால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவின் பிற ஏற்றுமதிப் பொருட்கள் மீதான வரியை 25% லிருந்து 50% ஆக உயர்த்தியது. இந்த நடவடிக்கை இந்தியாவின் அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை வெகுவாகப் பாதித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில், ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லூகோயில் ஆகியவற்றுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்தது. இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்துதான் இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெரும் பகுதியை வழங்கி வந்தன.
இந்தியா மலிவான ரஷ்ய எண்ணெயைக் கொள்முதல் செய்வதால் கிடைக்கும் பொருளாதாரப் பலன் 10 பில்லியன் டாலர் வருடாந்திர சேமிப்பு ஒருபுறம் இருந்தாலும், அமெரிக்காவின் அதிக வரியால் இந்தியாவின் ஏற்றுமதியில் ஏற்படும் இழப்பு ($53 பில்லியன்) மறுபுறம் உள்ளது.
எனவே, ரஷ்ய எண்ணெயைத் தொடர்ந்து வாங்குவது இந்தியாவுக்கு தற்போது ஒட்டுமொத்தமாகப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் சீனாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவில் கச்சா எண்ணெய் அதிகம் வாங்கிய 2ஆவது நாடாக இந்தியா மாறியுள்ளது.
November 15, 2025 6:47 PM IST
அக்டோபரில் ரஷ்யாவிடம் அதிக கச்சா எண்ணெய் வாங்கிய நாடுகள்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?


