• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அக்டோபரில் இந்தியாவில் செஸ் உலகக் கோப்பை: சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவிப்பு | Chess World Cup in India in October

GenevaTimes by GenevaTimes
July 22, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
அக்டோபரில் இந்தியாவில் செஸ் உலகக் கோப்பை: சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவிப்பு | Chess World Cup in India in October
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: செஸ் உலகக் கோப்பை போட்டி வரும் அக்​டோபர் 30-ம் தேதி முதல் நவம்​பர் 27 வரை இந்​தி​யா​வில் நடை​பெறும் என சர்​வ​தேச செஸ் கூட்​டமைப்பு (ஃபிடே) அறி​வித்​துள்​ளது. போட்டி நடை​பெறும் நகரம் பின்​னர் அறிவிக்​கப்​படும் எனவும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தத் தொடரில் 206 வீரர்​கள் கலந்து கொண்டு பட்​டம் வெல்ல மோது​வார்​கள். முதல் 3 இடங்​களை பிடிப்​பவர்​கள் 2026-ம்

ஆண்டு நடை​பெறும் ஃபிடே கேண்​டிடேட்ஸ் செஸ் தொடரில் கலந்து கொள்ள தகுதி பெறு​வார்​கள். கேண்​டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் வீரரே, உலக செஸ் சாம்​பியன்​ஷிப்​பில் விளை​யாட தகுதி பெறு​வார். கேண்​டிடேட்ஸ் தொடரின் வெற்​றி​யாளர், தற்​போது உலக சாம்​பிய​னாக உள்ள இந்​தி​யா​வின் டி.கு​கேஷுடன் பலப்​பரீட்சை நடத்​து​வார்.

செஸ் உலகக் கோப்பை தொடரை 23 வருடங்​களுக்கு பிறகு இந்​தியா நடத்த உள்​ளது. கடைசி​யாக 2002-ம் ஆண்டு ஹைத​ரா​பாத்​தில் நடை​பெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்​தி​யா​வின் விஸ்​வ​நாதன் ஆனந்த் வெற்றி பெற்​றிருந்​தார். இந்​தத் தொடரில் வீரர்​கள் நாக் அவுட் முறை​யில் போட்​டி​யிடு​வார்​கள். இதனால் ஒவ்​வொரு சுற்​றி​லும் தோல்​வியடை​யும் வீரர் வெளி​யேற்​றப்​படு​வார்.

ஃபிடே வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “உல​கக் கோப்பை தொடரில் 2021 முதல், நாக் அவுட் முறை பின்​பற்​றப்​படு​கிறது. ஒவ்​வொரு சுற்​றும் மூன்று நாட்​கள் நீடிக்​கும். முதல் இரண்டு நாட்​களில் இரண்டு கிளாசிக்​கல் ஆட்​டங்​கள் நடை​பெறும். அதைத் தொடர்ந்து தேவைப்​பட்​டால் மூன்​றாவது நாளில் டை-பிரேக்​கர் நடை​பெறும். 2025-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் முதல் மூன்று இடங்​களைப் பிடிக்​கும் வீரர்​கள், உலக செஸ் சாம்​பியன்​ஷிப்​பிற்​கான போட்​டி​யாளரைத் தீர்​மானிக்​கும் 2026-ம் ஆண்டு நடை​பெறும் கேண்​டிடேட்ஸ் போட்​டிக்கு நேரடி​யாக தகுதி பெறு​வார்​கள்” எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

செஸ் உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்​ளும் 206 வீரர்​களில் முதல் 50 இடங்​களில் உள்ள வீரர்​களுக்கு முதல் சுற்​றில் ‘பை’ வழங்​கப்​படும். இதனால் இவர்​கள் நேரடி​யாக 2-வது சுற்​றில் பங்​கேற்​பார்​கள். 51 முதல் 206-வது இடங்​களில் உள்ள வீரர்​கள் முதல் சுற்​றில் விளை​யாடு​வார்​கள்.

உலக சாம்​பியன் டி.கு​கேஷ், 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 2-வது இடம் பிடித்த ஆர்​.பிரக்​ஞானந்​தா, நடப்பு சாம்​பியனும் உலகின் முதல் நிலை வீரரு​மான நார்​வே​யின் மேக்​னஸ் கார்ல்​சன், உலகத் தரவரிசை​யில் 5-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் அர்​ஜுன் எரி​கைசி உள்​ளிட்ட நட்​சத்​திர வீரர்​கள் உலகக் கோப்பை தொடரில் களமிறங்க உள்​ளனர்.

கடந்த 2022-ம் ஆண்டு செஸ் ஒலிம்​பி​யாட், 2024-ம் ஆண்​டில் டாடா ஸ்டீல் செஸ், உலக ஜூனியர் யு-20 சாம்​பியன்​ஷிப், மற்​றும் இந்த ஆண்டு ஏப்​ரல் மாதம் ஃபிடே மகளிர் கிராண்ட் பிரிக்​ஸின் 5-வது கட்ட போட்டி ஆகிய​வற்றை இந்தியா நடத்தி உள்​ளது. இந்த வரிசை​யில்​ தற்​போது உலக கோப்​பை தொடரை​யும்​ நடத்​த உள்​ளது.



Read More

Previous Post

ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை அடுத்து மாநிலங்களவையை வழிநடத்தும் ஹரிவன்ஷின் பின்புலம் என்ன? | Deputy Chairman Harivansh chairs Rajya Sabha proceedings after Jagdeep Dhankhar resigned

Next Post

கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..

Next Post
கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..

கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin