ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவில், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக, விழா மேடைக்கு வந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை, பாஜக தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக்கொண்டு கிளம்பிய நேரத்தில், அவரை அழைத்த அமித் ஷா, தமிழிசையிடம் ஏதோ சொல்ல அதற்கு தமிழிசையும் கணிவான முறையில் பதிலளித்தார். ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத அமித் ஷா, காட்டமாக பேசுவது போலவும், தமிழிசைக்கு ஏதோ அறிவுறுத்துகிறார் என்பது போல அமைந்திருந்தது அவரது பேச்சு. இரண்டு பேரும் பேசிக்கொள்வது சாதாரணமானதாக இல்லை என்பது, அவர்கள் அருகில் அமர்ந்திருப்பவர்களின் முகங்களிலிருந்தும் நன்றாகவே தெரிகிறது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் விடியோவில் பதிவாகி, ஊடகங்கள் வாயிலாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 12) பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம், சென்னை விமான நிலையத்தில் இந்த நிகழ்வு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் பதில் அளிக்காமல், நன்றி தெரிவித்து வேகமாக சென்றுவிட்டார்.

