• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அகில இந்திய ஹாக்கி போட்டி: புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி சாம்பியன் | All India Hockey Tournament held in Kovilpatti

GenevaTimes by GenevaTimes
June 2, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
அகில இந்திய ஹாக்கி போட்டி: புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி சாம்பியன் | All India Hockey Tournament held in Kovilpatti
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடந்த அகில இந்திய ஹாக்கி போட்டியில் புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை, கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14-வது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது.

கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நேற்று மாலை 5 மணிக்கு நடந்த 3, 4-வது இடங்களுக்கான போட்டியில் புதுடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியும் மோதின. இதில், 4 – 2 என்ற கோல் கணக்கில் புதுடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தது.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு நடந்த இறுதி போட்டியில் புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும், புவனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் மோதின. போட்டியை கே.ஆர். குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் ஆகியோர் தலைமையில் முன்னாள் இந்திய ஹாக்கி வீரரும் அர்ஜுனா விருது பெற்றவருமான எம். முகமது ரியாஸ் தொடங்கி வைத்தார்.

இதில், 3 – 2 என்ற கோல் கணக்கில் புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வெற்றி சாம்பியன் பட்டம் பெற்றது. தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. சாம்பியன் பட்டம் பெற்ற புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணிக்கு ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த புவனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணிக்கு ரூ.1 லட்சம், 3-வது இடம் பிடித்த புதுடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் லட்சும் அம்மாள் நினைவு கோப்பை வழங்கப்பட்டது.

4-வது இடம் பெற்ற செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணிக்கு நினைவு கோப்பை வழங்கப்பட்டது. மேலும், நடுவர்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த கோல்கீப்பர், சிறந்த தற்காப்பு ஆட்டக்காரர், சிறந்த நடுகள ஆட்டக்காரர், சிறந்த முன்வரிசை வீரர், சிறந்த வளர்ந்து வரும் வீரர் மற்றும் போட்டியின் சிறந்த வீரர் ஆகிய தனி நபர் விருதுகள் வழங்கப்பட்டன.



Read More

Previous Post

இந்தியாவில் 4000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழப்பு | 3961 people infected with corona in India 4 people died in 24 hours

Next Post

மீண்டும் தலைதூக்கும் ‘தஞ்சாவூர் வாடல்நோய்’ – மரங்கள் காய்ந்து கருகும் துயரம் | ‘Thanjavur Wilt’ Resurfacing – Tragedy of Trees Drying Up and Burning

Next Post
மீண்டும் தலைதூக்கும் ‘தஞ்சாவூர் வாடல்நோய்’ – மரங்கள் காய்ந்து கருகும் துயரம் | ‘Thanjavur Wilt’ Resurfacing – Tragedy of Trees Drying Up and Burning

மீண்டும் தலைதூக்கும் ‘தஞ்சாவூர் வாடல்நோய்’ - மரங்கள் காய்ந்து கருகும் துயரம் | 'Thanjavur Wilt' Resurfacing - Tragedy of Trees Drying Up and Burning

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin