• Login
Tuesday, September 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அகிலேஷ் யாதவ் சொகுசு பஸ்ஸில் அதை பார்த்தீங்களா? அப்படியே நம்ம CM விஜய் ஸ்கெட்ச்.. அங்கேதான் ஹைலைட் | Akhilesh Yadav’s Luxury Bus.. Did You Spot That? Just Like Our CM Vijay’s Sketch.. That’s the Highlight!

GenevaTimes by GenevaTimes
September 22, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அகிலேஷ் யாதவ் சொகுசு பஸ்ஸில் அதை பார்த்தீங்களா? அப்படியே நம்ம CM விஜய் ஸ்கெட்ச்.. அங்கேதான் ஹைலைட் | Akhilesh Yadav’s Luxury Bus.. Did You Spot That? Just Like Our CM Vijay’s Sketch.. That’s the Highlight!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Hema Vandhana

Time
Updated: Tuesday, September 22, 2026, 9:10 [IST]

கான்பூர்: 2027 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் இப்போதே ரெடியாகி கொண்டிருக்கின்றன.. இந்த லிஸ்ட்டில் சமாஜ்வாடி கட்சியும் டாப்பில் உள்ளது.. மிக மும்முரமாக களமிறங்கியுள்ளது.. அகிலேஷ் யாதவ் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்யப் போகிறார்.. அதற்காக தயாராகியிருக்கும் பிரம்மாண்ட பஸ்தான் இப்போது ஹாட் டாபிக்காகி உள்ளது.. அகிலேஷ் யாதவின் இந்த பஸ்ஸூக்கும், நம்முடைய தமிழக அரசியலுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.. அது என்ன தெரியுமா?

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “சமாஜ்வாடி PDA யாத்திரை” என்ற பெயரில் உத்தரப் பிரதேசம் முழுவதும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த யாத்திரை அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் உறுதியான தேதி என்ன? பிரச்சார ரூட் என்ன? அட்டவணை உட்பட இன்னும் எதுவுமே முடிவு செய்யப்படவில்லை.

Akhilesh Yadav

பஸ்ஸுக்குள் இத்தனை வசதிகளா?

இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சிறப்பு பேருந்து லக்னோவில் உள்ள சமாஜ்வாடி கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது… ஆனால் இது சாதாரண பிரச்சார பஸ் கிடையாது.. 15 மீட்டர் நீளமுள்ள மெர்சிடிஸ் சொகுசு பேருந்து… சுமார் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை செலவு செய்து இந்த பஸ் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.

பஸ்ஸில் குண்டுதுளைக்காத கண்ணாடிகள் உள்ள.. மக்கள் கூட்டத்துக்கு நடுவே நின்று பேசுவதற்காக பஸ்ஸின் மேல்பகுதிக்கு செல்லும் ஹைட்ராலிக் லிப்ட் உள்ளது.

அத்துடன் 6 பேர் உட்கார்ந்து ஆலோசனை நடத்தும் அறை, சோஃபா, படுக்கை, கிச்சன், பேன்ட்ரி, பாத்ரூம், சிசிடிவி கேமராக்கள், வெளிப்புற எல்இடி ஸ்கிரீன்கள், வைஃபை, ஏசி என பல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன… அகிலேஷ் யாதவ் இதே பஸ்ஸை ஏற்கனவே 2016-17 மற்றும் 2021 தேர்தல் பிரச்சாரங்களிலும் பயன்படுத்தியுள்ளார்.

அந்த ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா

இங்கேதான் நம்ம விஜய் வருகிறார்.. இந்த பஸ்ஸில் இன்னொரு ஸ்பெஷாலிட்டி இருக்கிறது.. தமிழகத்தில் தவெகவை தொடங்கி பிரச்சார வாகனத்தைத் தயாரித்த அதே தொழில்நுட்ப கலைஞரை கொண்டுதான் அகிலேஷின் இந்த பஸ்ஸும் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னொரு ஹைலைட்டும் உள்ளது.. ரெட் கலரில் இருக்கும் இந்த பஸ்ஸை சுற்றிலும் அகிலேஷ் யாதவின் போட்டோக்களே பிரதானமாக இடம்பெற்றுள்ளது. வழக்கமாக சமாஜ்வாடி கட்சியின் பிரசார வாகனங்களில் அகிலேஷுடன் மற்ற முக்கிய தலைவர்களின் போட்டோக்களும் இடம்பெறும். ஆனால் இந்த முறை அந்த பாணி மாறியுள்ளது. அகிலேஷின் படம் மட்டும்தான் உள்ளன… இதுவும், தமிழகத்தில் விஜய் பயன்படுத்திய பிரச்சார வாகனத்தின் பாணியை போல இருப்பதாகவே சொல்கிறார்கள்.

 தவெக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் சர்ச்சை.. தேர்தலை கேலிக்கூத்து ஆக்குவதா? வெகுண்டெழுந்த பாஜக!

தவெக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் சர்ச்சை.. தேர்தலை கேலிக்கூத்து ஆக்குவதா? வெகுண்டெழுந்த பாஜக!

பஸ்ஸில் அந்த வார்த்தையை பார்த்தீங்களா?

பஸ்ஸின் இடதுபுறத்தில் அகிலேஷ் யாதவின் படத்துடன் “சமூக நீதியின் கொடி உயர்ந்து பறக்கும், PDA மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவரும்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

வலதுபுறத்தில் மறைந்த முலாயம் சிங் யாதவின் படத்துடன் “PDA என்பது சமூக நீதிக்கான போராட்டம்” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல.. பீம்ராவ் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா, ஜனேஷ்வர் மிஸ்ரா, பெனி பிரசாத் வர்மா ஆகிய தலைவர்களின் படங்களும் இடம்பெற்றுள்ளன.

வலதுபுறத்தில் மறைந்த முலாயம் சிங் யாதவின் படத்துடன், “PDA என்பது சமூக நீதிக்கான போராட்டம்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. பீம்ராவ் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா, ஜனேஷ்வர் மிஸ்ரா, பெனி பிரசாத் வர்மா ஆகிய தலைவர்களின் படங்களும் உள்ளன.

PDA என்றால் என்ன?

Pichhda, Dalit, Alpsankhyak என்பதன் சுருக்கம்தான் PDA. அதாவது பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினரை ஒன்றிணைப்பதுதான் சமாஜ்வாடியின் இந்த அரசியல் உத்தி.

2024 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் 80 தொகுதிகளில் சமாஜ்வாடி 37 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, முஸ்லிம்கள், யாதவர்கள் மட்டுமல்லாமல் குர்மி, பால், தலித் உள்ளிட்ட சமூகங்களையும் PDA என்ற பெயரில் இணைக்க சமாஜ்வாடி முயற்சி மேற்கொண்டது.

முஸ்லீம் வாக்குகள் யாருக்கு போனாலும் வெல்வது பாஜக தான்.. உபியில் சிக்கலாகும் இஸ்லாமியர் வாக்குகள்

முஸ்லீம் வாக்குகள் யாருக்கு போனாலும் வெல்வது பாஜக தான்.. உபியில் சிக்கலாகும் இஸ்லாமியர் வாக்குகள்

பாஜக விமர்சனம்

PDA-வின் “A” என்பது பெண்களையும் குறிக்கும் என்று கட்சி விளக்கம் அளித்துள்ளது. ஆனால் அகிலேஷ் யாதவ், P என்பதை Pandit என்றும் விரிவுபடுத்திப் பேசியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்கள், துயரப்படுபவர்கள், அவமதிக்கப்பட்டவர்கள் என அனைவரையும் PDA-வில் இணைப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த PDA அரசியல் உத்தியை பாஜக வழக்கம்போல் விமர்சித்து வருகிறது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், PDA-வை “கலவரக்காரர்கள் மற்றும் குற்றவாளிகளின் தயாரிப்பு நிறுவனம்” என்று விமர்சித்துள்ளார்.

ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல், சமாஜ்வாடி, தன்னுடைய தேர்தல் பணியை கவனிக்க தொடங்கிவிட்டது. 1.77 லட்சம் பூத்துகளிலும் கமிட்டிகளை பலப்படுத்தி, ஒவ்வொரு பூத்திலும் கூடுதலாக 5 வாக்காளர்களை இணைக்கவும் முயற்சி நடக்கிறது.

ஆக, ஒருபக்கம் பூத் வேலை.. இன்னொரு பக்கம் PDA யாத்திரை.. இதற்கிடையே “விஜய் பாணியில்” பிரச்rசார பஸ்* என பயங்கர பிஸியாக இருக்கிறார் அகிலேஷ் யாதவ்…!!

English summary

Akhilesh Yadav’s Luxury Bus.. Did You Spot That Photo? A Clear Vijay-Style Twist!

Read More

Previous Post

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Next Post

Zaheer Khan | சிஎஸ்கே பயிற்சியாளராக ஜாகீர் கான்… நியமனத்தின் பின்னணியில் இருந்த முக்கிய நபர்!

Next Post
Zaheer Khan | சிஎஸ்கே பயிற்சியாளராக ஜாகீர் கான்… நியமனத்தின் பின்னணியில் இருந்த முக்கிய நபர்!

Zaheer Khan | சிஎஸ்கே பயிற்சியாளராக ஜாகீர் கான்... நியமனத்தின் பின்னணியில் இருந்த முக்கிய நபர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin