• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அகமதாபாத் விமான விபத்து இடிபாடுகளுக்கு இடையில் 100 பவுன் தங்க நகைகள் மீட்பு | 100 pounds of gold jewellery recovered from Ahmedabad plane crash wreckage

GenevaTimes by GenevaTimes
June 18, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
அகமதாபாத் விமான விபத்து இடிபாடுகளுக்கு இடையில் 100 பவுன் தங்க நகைகள் மீட்பு | 100 pounds of gold jewellery recovered from Ahmedabad plane crash wreckage
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அகம​தா​பாத்: அகமதாபாத்தில் விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் இடிபாடுகளுக்கு இடையிலிருந்து கிடைத்த 100 பவுனுக்கும் மேற்பட்ட தங்க நகைகள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அடுத்த சில நிமிடங்களில் அருகில் இருந்து பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடம் மீது மோதியது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியதில் அதில் பயணம் செய்தவர்கள், விடுதியில் இருந்த மாணவர்கள், பொதுமக்கள் என மொத்தம் 279 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தை தொடர்ந்து, அருகில் இருந்த ராஜு படேல் (56) என்ற கட்டுமான தொழிலதிபர் 5 நிமிடங்களில் தனது குழுவினருடன் சம்பவ இடத்தை அடைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டார். இதுகுறித்து ராஜு படேல் கூறும்போது, “விபத்துப் பகுதியில் அனல் கடுமையான இருந்ததால் முதல் 15 – 20 நிமிடங்கள் எங்களால் நெருங்க முடியவில்லை. தீயணைப்பு படையின் முதல் குழு மற்றும் ஆம்புலன்ஸ்கள் வந்தவுடந்தவுடன் நாங்கள் மீட்புப் பணியில் இறங்கினோம். தொடக்கத்தில் ஸ்ட்ரெச்சர்கள் இல்லாதால் காயம் அடைந்தவர்களை மீட்க, புடவைகள் மற்றும் பெட்ஷீட்களை பயன்படுத்தினோம்” என்றார்.

படேல் குழுவினரை இரவு 9 மணி வரை சம்பவ இடத்தில் இருக்க அதிகாரிகள் அனுமதித்தனர். இதற்கிடையில் அவசர சேவைகள் பிரிவு அப்பகுதியை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்ட பிறகு படேல் குழு அடுத்த காரியத்தை நோக்கித் திரும்பியது.

பயணிகளின் உடைமைகளும் விமான பாகங்களும் சிதறிக் கிடந்த அந்த கருகிய நிலத்தில் விலை உயர்ந்த பொருட்களை தேடும் பணியில் படேல் குழுவினர் ஈடுபட்டனர். இதில் 800 கிராமுக்கும் மேற்பட்ட (100 பவுன்) தங்க நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கம், பாஸ்போர்ட்கள், பகவத்கீதை புத்தகம் ஆகியவற்றை மீட்டனர். இவை அனைத்தையும் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

மீட்கப்பட்ட அனைத்து உடைமைகளும் ஆவணப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவை நெருங்கிய உறவினர்களிடம் விரைவில் திருப்பித் தரப்படும் என்றும் உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார்.

அகமதாபாத்தில் கடந்த 2008-ல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் உட்பட பல்வேறு பேரிடர்களில் ராஜு படேல் குழு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.



Read More

Previous Post

இஸ்ரேலில் அலறத்தோடங்கிய சைரன்கள்! ஈரான் பாய்ச்சிய ஏவுகணைகள்

Next Post

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் சாய் சுதர்சனை 3-வது இடத்தில் களமிறக்கலாம்: ரவி சாஸ்திரி | Sai Sudharsan can play at 3 in first Test against England says Ravi Shastri

Next Post
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் சாய் சுதர்சனை 3-வது இடத்தில் களமிறக்கலாம்: ரவி சாஸ்திரி | Sai Sudharsan can play at 3 in first Test against England says Ravi Shastri

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் சாய் சுதர்சனை 3-வது இடத்தில் களமிறக்கலாம்: ரவி சாஸ்திரி | Sai Sudharsan can play at 3 in first Test against England says Ravi Shastri

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin