Last Updated:
விமானம் கட்டிடங்களில் மோதி கீழே விழுந்தபோது அங்கிருந்த குடியிருப்புப் பகுதிகளில் வசித்த சிலரும் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.
ஜூன் 12ஆம் தேதி பிற்பகல் 1:39 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நொடிகளிலேயே கீழே விழுந்து வெடித்ததில், அதில் பயணித்த 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானம் கட்டிடங்களில் மோதி கீழே விழுந்தபோது அங்கிருந்த குடியிருப்புப் பகுதிகளில் வசித்த சிலரும் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.
அகமதாபாத் விமான விபத்து வடு மறைவதற்குள் இன்னொரு ஹெலிகாப்டர் விபத்துச் செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. கேதார்நாத்தின் தாம் பகுதியில் இருந்து குப்தகாஷிக்குப் பறந்து கொண்டிருந்த ஆர்யன் ஏவியேஷன் என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் கௌரிகுண்ட் காடுகளில் விழுந்து விபத்துக்குள்ளானது.
காலை 5:17 மணிக்கு கேதார்நாத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு குப்தகாஷிக்குப் புறப்பட்ட ஹெலிகாப்டர், கேதார்நாத் பள்ளத்தாக்கில் மோசமான வானிலை காரணமாக வான் பாதையை விட்டு விலகிச் சென்றது. வானிலை மிகவும் மோசமாக இருந்ததால், ஹெலிகாப்டர் வழி தவறிச் சென்றதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
இதனிடையேதான் கௌரிகுண்ட் காடுகளில் விழுந்த ஹெலிகாப்டர் தீப்பற்றி வெடித்தது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே காட்டுப் பகுதியில் விழுந்து தீப்பிடித்தது. அந்த ஹெலிகாப்டரில் விமானி உட்பட ஏழு பேர் இருந்தனர். இந்த ஏழு பேரும் உயிரிழந்தனர். இதில் 10 வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Uttarakhand (Uttaranchal)
June 15, 2025 9:49 AM IST

