Last Updated:
Vishwashkumar Ramesh Video | அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த விஸ்வாஷ் குமார் ரமேஷின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. 260க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 11A இருக்கையில் இருந்த ரமேஷ் மட்டும் உயிர் பிழைத்தார்.
அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த விஸ்வாஷ் குமார் ரமேஷின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது.
அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், மேலெழுந்த சில நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அந்த விமானத்தில் இருந்த அனைவரும் பலியான நிலையில், 11A இருக்கையில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளியான லண்டன் குடிமகன் விஸ்வாஷ் குமார் ரமேஷ் மட்டும் உயிர் பிழைத்தார்.
லண்டனில் 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வரும் விஸ்வாஸ் குமார் ரமேஷ் , விடுமுறையை குடும்பத்தினருடன் கழித்து விட்டு சகோதரர் அஜய் குமார் ரமேஷுடன் லண்டன் சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளார். விமானத்தில் 11 ஏ இருக்கையில் இருந்த ரமேஷ் விஸ்வாஸ் குமார் உயிர் தப்பிய நிலையில் 19ஏ இருக்கையில் இருந்த அவரது சகோதரர் பரிதாபமாக உயிரிழந்தார். 260க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட விமான விபத்தில் ஒற்றை ஆளாய் உயிர் பிழைத்த ரமேஷ் விஸ்வாஸ் குமார் அதிசயப் பிறவியாகவே பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில் தான் உயிர் பிழைத்தது எப்படி என்பது குறித்து ஊடகங்களிடம் விளக்கமளித்த ரமேஷ், விமானத்தில் இருந்து சீட் உடைந்து தனியாக வந்ததன் காரணமாகவே தான் அவசர வழி மூலம் தப்பித்து உயிர் பிழைத்ததாக ரமேஷ் தெரிவித்திருக்கிறார். அந்த ஒரு சம்பவம்தான் உயிர் பிழைக்க காரணமாக அமைந்தது என்றும் ரமேஷ் கூறியிருந்தார். அப்போதே அவர் விபத்து நடந்த பகுதியின் அருகில் உள்ள சாலையில் நடந்து வருவது போன்ற வீடியோ வெளியானது.
अहमदाबाद प्लेन क्रैश में नया वीडिया सामने आया, दुर्घटना में जीवित बचे विश्वास का एक और वीडियो सामने आया, विश्वास दुर्घटनास्थल से बाहर निकलते हुए दिखाई दे रहे हैं#Ahmedabad #BreakingNews #PlaneCrash #NewViralVideo pic.twitter.com/hO7IzZbDvB
— News18 MadhyaPradesh (@News18MP) June 16, 2025
இந்நிலையில் அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த விஸ்வாஷ் குமார் ரமேஷின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. விமானம் தீப்பற்றி எரிந்தபோது மருத்துவமனை விடுதி வளாகத்தில் இருந்து காயத்துடன் நடந்து வரும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
Ahmedabad,Gujarat
June 16, 2025 10:49 AM IST


