• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அகமதாபாத் பொறியாளர் உருவாக்கிய ட்ரோன்… ஆர்டர் செய்த ராணுவம்…! அப்படி என்ன ஸ்பெஷல்…?

GenevaTimes by GenevaTimes
July 27, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அகமதாபாத் பொறியாளர் உருவாக்கிய ட்ரோன்… ஆர்டர் செய்த ராணுவம்…! அப்படி என்ன ஸ்பெஷல்…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 27, 2025 1:33 PM IST

ராணுவப் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த ட்ரோன், ஏற்கனவே சோதனையின்போது இந்திய ராணுவத்தின் கவனத்தை ஈர்த்தது. இதனால் முதற்கட்டமாக 20க்கும் மேற்பட்ட Gati ட்ரோன் யூனிட்ஸ்களை சமீபத்தில் ராணுவம் ஆர்டர் செய்துள்ளது.

News18News18
News18

அகமதாபாத்தைச் சேர்ந்த கேசவ்காந்த் சர்மா என்ற பொறியாளர் “Gati” என்ற ட்ரோனை உருவாக்கி உள்ளார். இந்திய ராணுவம் இந்த ட்ரோனின் 20க்கும் மேற்பட்ட யூனிட்ஸ்களுக்கு ஆர்டர் செய்துள்ளது. அப்படி என்ன இதன் சிறப்பம்சம் என்கிறீர்களா?

கேசவ்காந்த் சர்மா உருவாக்கி இருக்கும் இந்த ஸ்பெஷல் ட்ரோன், குறிவைக்கப்பட்ட இலக்குகள் மீது கையெறி குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி, குண்டுகள் வெற்றிகரமாக வெடித்த பிறகு பாதுகாப்பாகத் திரும்பும் திறன் கொண்டது ஆகும். ராணுவப் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த ட்ரோன், ஏற்கனவே சோதனையின்போது இந்திய ராணுவத்தின் கவனத்தை ஈர்த்தது. இதனால் முதற்கட்டமாக 20க்கும் மேற்பட்ட Gati ட்ரோன் யூனிட்ஸ்களை சமீபத்தில் ராணுவம் ஆர்டர் செய்துள்ளது.

கேசவ்காந்த் சர்மா உருவாக்கி இருக்கும் Gati ட்ரோன் 500 மீட்டர் உயரத்தில் 7.5 கிலோமீட்டர் வரை பறக்கக் கூடியது. அதிக துல்லியத்துடன் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்டதாகும். இதன் மூலம் கேசவ்காந்த் சர்மாவின் கண்டுபிடிப்பு, போர்க்களத்தில் ஒரு முக்கிய தேவையை நிவர்த்தி செய்கிறது. கையெறி குண்டுகளைப் பயன்படுத்துவதில் துல்லியத்தின் தேவைதான் அது.

வழக்கமாகப் பயன்படுத்தும் கையெறி குண்டுகளைத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்த கையால் குண்டுகளின் மேல் இருக்கும் pin-ஐ எடுக்கும் சூழல் உள்ளது. இதைத் தொடர்ந்து அதிலிருக்கும் லிவரை ரிலீஸ் செய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது. பின் நான்கு வினாடிகள் கழித்துதான் வெடிக்கிறது. ஆனால் Gati ட்ரோன் இந்த முழு செயல்முறையையும் தானியக்கமாக்குகிறது.

தனது “Gati drone” பற்றி பேசிய சர்மா “இந்த ட்ரோன் கையெறி குண்டை குறிப்பிட்ட இடத்தில் போடுவது மட்டுமில்லை – இது வெடிகுண்டின் pin பகுதியை அகற்றி, லிவரையும் விடுவிக்கிறது” என்று விளக்கி உள்ளார். “pin பகுதியை அகற்றாமல், ஒரு வெடிகுண்டால் வெடிக்க முடியாது. எங்கள் ட்ரோன் இந்த செயலை தாக்குதலுக்கு செல்லும் வழியில் வானில் செய்கிறது மற்றும் குண்டு இலக்கு வைக்கப்பட்ட இடத்தில் சரியாக வெடிப்பதை உறுதி செய்கிறது. தாக்குதலுக்குப் பிறகு, ட்ரோன் பாதுகாப்பாகத் திரும்பும்” என்றார்.

போக்ரானில் இந்திய ராணுவத்தின் முன் Gati ட்ரோனின் செயல்பாடு நிரூபித்துக் காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ராணுவம் சர்மாவின் நிறுவனமான Protthapan இடமிருந்து 20-க்கும் மேற்பட்ட ட்ரோன்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இது போன்ற ட்ரோன்களைப் பயன்படுத்துவது போர்க்களத்தில் உயிர் இழப்பைக் கணிசமாக குறைக்க உதவும் என்கிறார் கேசவ்காந்த் சர்மா.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Ahmedabad,Gujarat

First Published :

July 27, 2025 1:33 PM IST

Read More

Previous Post

மறைந்த தலைவர் மாவையை நினைவு கூர்ந்த சிறீதரன் எம்.பி

Next Post

ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுவதற்கு கிளம்பும் எதிர்ப்பு

Next Post
ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுவதற்கு கிளம்பும் எதிர்ப்பு

ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுவதற்கு கிளம்பும் எதிர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin