அகமதாபாத்தில் இன்று நடைபெறவிருந்த கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளை பகிர்ந்து கொண்டன. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது பிளே ஆப் சுற்றுக்குள் நுழைவதற்கான போட்டியில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி மற்றும் லக்னோ அணிகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற இருந்தது,
ஐபிஎல் தொடரிலிருந்து ஏறக்குறைய வெளியேறிய நிலையில் இன்றைய ஆட்டத்தில் முதலிடத்தில் இருக்கும் கொல்கத்தா அணியை குஜராத் அணி வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது. இந்த நிலையில் அகமதாபாத்தில் பெய்த தொடர் மழை காரணமாக டாஸ் போடாமலேயே போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு 7 மணிக்கு தொடங்க இருந்தது. இருப்பினும் அப்போது மழை பெய்ய ஆரம்பித்ததால் போட்டி சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மழை விரைவில் நின்று போட்டியில் நன்றாக நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மழை அவ்வப்போது வலுவாக பெய்து இடையூறு செய்து கொண்டே இருந்தது.
அவ்வப்போது நடுவர்கள் ஆடுகளத்தை சோதனை இட்டு கொண்டிருந்தனர். இதற்கு இடையே இரவு 10.56 க்கு போட்டி தொடங்கும் என்றும், இந்த போட்டி 5 ஓவர்களை கொண்டதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதன் மூலம் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் 19 புள்ளிகளை பெற்றுள்ள கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதுடன், முதல் இரண்டு இடங்களுக்குள் தரவரிசையில் இடம்பெறுவதை உறுதி செய்துள்ளது. மேலும் 13 போட்டிகளில் 5 வெற்றி 7 தோல்வியுடன் 11 புள்ளிகளை மட்டுமே பெற்ற குஜராத் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. தற்போது வரை பஞ்சாப், மும்பை மற்றும் குஜராத் அணிகள் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)