சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட அகத்தியர் வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் எஸ்.சிதம்பரப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. இப்பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 4 மாணவர்களும் 70 புள்ளிக்கு மேல் 11 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
இந்நிகழ்வில் அதிதிகளாக வலயக்கல்விப்பணிப்பாளர் டொக்டர் உமர் மௌலானா, நாவிதன் வெளிப்பிரதேசசெயலாளர் செல்வி .இ.ராகுலநாயகி, பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான பி.எம்.யசீர் அறபாத், திருமதி என்.மகேந்திரகுமார் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
(மணல்சேனை நிருபர்)
The post அகத்தியர் வித்தியாலயத்தில் மாணவர்கள் பாராட்டு விழா appeared first on Thinakaran.