• Login
Sunday, October 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அகதிகள் மறுவாழ்வு பெயரில் நிதி வசூல்: கனடியன் பேரவை – J.M.S அமைப்புக்களுக்கு எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
October 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அகதிகள் மறுவாழ்வு பெயரில் நிதி வசூல்: கனடியன் பேரவை – J.M.S அமைப்புக்களுக்கு எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவில் அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழ் மக்களை மீள இலங்கைக்கு
கொண்டு வருவதாக கனடியன் பேரவை அமைப்பு மற்றும் ஜ.எம்.எஸ் என்ற அமைப்பு, அதற்கான திட்டம் இல்லாது இரு நாட்டு அரசுகளுடன் பேசாது ஒரு உத்தரவாதம் இன்றி
மக்களிடம் பணம் வசூலித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எனவே இந்த அமைப்புகள் பணம் வசூலிப்பதை உடன்
நிறுத்த வேண்டும் எனவும் வசூலித்த பணம் எவ்வளவு என உடன் அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுருத்தியுள்ளார்.

முகாம்களுக்கும் விஜயம் 

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று (24-10-2026) இடம்பெற்ற ஊடக
மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

“இந்தியாவில் அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழ் மக்களை மீள இலங்கைக்கு கொண்டு
வருவதாக கனடாவில் கனடியன் பேரவை அமைப்பு மற்றும் ஜ.எம்.எஸ் என்ற அமைப்பு பணம்
வசூலித்து வருவது தொடர்பாக சில சர்ச்சைகள் இடம்பெற்று வருகின்றது.

அகதிகள் மறுவாழ்வு பெயரில் நிதி வசூல்: கனடியன் பேரவை - J.M.S அமைப்புக்களுக்கு எச்சரிக்கை | Scam Targetting Lankan Tamil Refugees Probed

இது தொடர்பாக இந்தியா திருச்சி மற்றும் புலால் முகாம்களில் உள்ள மக்கள்
தாங்கள் தாய் நாட்டுக்கு வரப்போகின்றோம் அதற்கான ஆயத்தங்கள் செய்து தருமாறு
என்னுடன் தொடர்பு கொண்டு கோரியுள்ளனர்.

இதற்கமைய எதிர்வரும் மாதம்
இந்தியாவுக்கு குழு ஒன்றுடன் செல்லவுள்ளேன் அப்போது அனைத்து முகாம்களுக்கும்
விஜயம் மேற்கொள்ளவுள்ளேன்.

கனடியன் பேரவை 


இந்த நிலையில் கனடியன் பேரவை அமைப்பு மற்றும் ஜ.எம்.எஸ் என்ற அமைப்பும்
பாதயாத்திரையாக சென்று பணம் வசூலிக்கின்றனர் இது கனடாவில் மாத்திரம் அல்ல பல
ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறு பணம் வசூலித்து வருகின்றனர்

இந்த அமைப்புகள் பணம் வசூலிப்பதை பாராட்டுகின்றோம் இந்தியாவில் அகதிகளாக
இருக்கும் மக்களை மீளக் குடியமர்த்துவது நல்ல விஷயம் ஆனால் அதற்கான திட்டமிடல்
இருக்கிறது அந்த திட்டத்தை வெளிப்படுத்தியதா ? இலங்கை அரசுடன் அல்லது இந்திய
அரசுடன் பேசினார்களா ? யார் உத்தரவாதம் தந்தார்கள் ? இவைகள் எதுவும் இல்லாமல்
எப்படி பணம் வசூலிப்பார்கள்.

அகதிகள் மறுவாழ்வு பெயரில் நிதி வசூல்: கனடியன் பேரவை - J.M.S அமைப்புக்களுக்கு எச்சரிக்கை | Scam Targetting Lankan Tamil Refugees Probed

கடந்த காலத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் போராட்டத்தை ஆதரித்து
கஷ்டப்பட்டு உழைத்து கொடுத்து இன்று கடனாளியாக எத்தனையோ பேர் கடன் கட்ட
முடியாது இரண்டு அல்லது மூன்று தொழில்களை செய்து கஷ்டப்பட்டுக்
கொண்டிருக்கிறார்கள்

இவ்வாறான நிலையில் முதலாவது அந்த மக்கள் வர விரும்ப வேண்டும் அவர்களை கொண்டு
வந்தால் அவர்களுக்கான காணி, வீடுகள், வாழ்வாதாரம் மற்றும் இருப்பிடத்தை உறுதிப்படுத்த
வேண்டும் அத்தோடு அந்த புலம் பெயர்ந்த மக்களை மீளக் கொண்டு வந்து குடியேற்றுவதற்கான
சட்டதிட்டம் நிறைய இருப்பதுடன் இவ்வாறு பல பிரச்சனை இருக்கிறது.

இவ்வாறான நிலையில் இரண்டு நாட்டு அரசாங்கங்களுடன் கலந்து உரையாடாமல் எவ்வாறு
பணம் வசூலிப்பீர்கள் ? எனவே பணம் வசூலிப்பதை உடன் நிறுத்தப்பட வேண்டும்
என்பதுடன் கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மாத்திரம் அல்ல ஐரோப்பிய
நாடுகளில் உள்ள தமிழ் மக்களும் விழிப்பாக இருக்க வேண்டும்.

புலம்பெயர் தேசம்


இந்த அகதிகளை மீளக் குடியேற்றுவது தொடர்பில் நாங்கள் புலம்பெயர் தேசத்தில்
உள்ளவர்கள் உட்பட ஒரு குழுவை ஏற்படுத்தி ஆலோசனைகளை பெற்று முன்னெடுத்துக்
கொண்டு வருகிறோம் என்பதுடன் அடுத்த மாதம் என்னுடன் குழு ஒன்று இந்தியாவுக்கு
பயணமாகிறது.

அங்கு அனைத்து அகதி முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு அவர்களின்
விருப்பு வெறுப்புகளை தெரிந்து கொண்ட பின்னர் இலங்கை அரசுடன் இந்திய அரசுடன்
பேசமுடியும்.

அகதிகள் மறுவாழ்வு பெயரில் நிதி வசூல்: கனடியன் பேரவை - J.M.S அமைப்புக்களுக்கு எச்சரிக்கை | Scam Targetting Lankan Tamil Refugees Probed


எனவே இந்தியாவில் உள்ள அகதிகளை மீள கொண்டு வந்து குடியேற்றுவது தொடர்பாக
எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட கனடியன் பேரவை அமைப்பு மற்றும் ஜ.எம்.எஸ் என்ற
அமைப்பு என்னுடன் தொடர்பு கொள்ளவும்.


அதேவேளை ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலங்கை வாழ் மக்களின் இலங்கை கடவுச்சீட்டு
காலாவதியான மற்றும் புதிய பாஸ் போட்டுக்களை பெறுவதற்காக அந்தந்த நாடுகளில்
உள்ள இலங்கை தூதரகங்களுக்கு சென்று கடவுசீட்டை புதிப்பித்து பெற்றுக் கொள்ள
குறைந்தது ஆறு மாதம் தொடக்கம் இரண்டு வருட காலம் நீடிக்கின்றனர்.


அது மட்டுமல்ல அதற்கான கட்டணங்கள் அதிகரிக்கின்றது இதனால் அவசர தேவைக்காக அந்த
மக்கள் இலங்கைக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர் எனவே இந்த ஆட்சி
காலத்தில் இப்படியான செயல்பாடு வரவேற்கதக்கது அல்ல” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

மலேசியத் தமிழ் நாளிதழ் உலகின் பேரிழப்பு – Malaysiakini

Next Post

“தனுஷ் வருகையால் பயமா? யார் வந்தாலும் 30-40 வருசத்துக்கு விஜய் தான் CM” – அமைச்சர் CTR நிர்மல்குமார் | CTR Nirmal Kumar on Dhanush Political Entry: Vijay Will Lead TN for the Next 30–40 Years

Next Post
“தனுஷ் வருகையால் பயமா? யார் வந்தாலும் 30-40 வருசத்துக்கு விஜய் தான் CM” – அமைச்சர் CTR நிர்மல்குமார் | CTR Nirmal Kumar on Dhanush Political Entry: Vijay Will Lead TN for the Next 30–40 Years

“தனுஷ் வருகையால் பயமா? யார் வந்தாலும் 30-40 வருசத்துக்கு விஜய் தான் CM” - அமைச்சர் CTR நிர்மல்குமார் | CTR Nirmal Kumar on Dhanush Political Entry: Vijay Will Lead TN for the Next 30–40 Years

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin