இது தொடர்ந்தால், மதுரோவை விட கடுமையான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த பின், டெல்சி அப்படியே அமைதியாகி விட்டார்.
தற்போது 3 – 5 கோடி பில்லியன் பேரல்கள் எண்ணெய்களை டெல்சி கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் கூறியிருக்கிறார். இந்த எண்ணெயின் மொத்த மதிப்பு 3 பில்லியன் டாலர்கள்.
ட்ரம்ப் பேசும்போது, மதுரோவின் சிறைபிடிப்பிற்கு முன்னும், பின்னும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுடன் பேசியதாக ட்ரம்ப் கூறியிருக்கிறார்.
ஆக, மதுரோ சிறைபிடிப்பு சம்பவம் முழுக்க முழுக்க ‘வணிக நோக்கத்திற்காக’ செய்யப்பட்டது ஆகும். மேலும், இது அவரது ஆதிக்கத்தைக் காட்டவும் செய்யப்பட்டது ஆகும்.

வெனிசுலாவில் மின்சாரம் தொடங்கி ரயில்வே வரை பல உள்கட்டமைப்புப் பணிகளை செய்துள்ளது சீனா. சீனாவும், வெனிசுலாவும் எண்ணெய் வர்த்தகத்தில் இருந்து வருகிறது.
ஆனால், வெனிசுலாவில் சீனாவின் முதலீட்டிற்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் தான் ட்ரம்ப் காய் நகர்த்துவார்.
இந்த இடத்தில் ‘டோன்ரோ கோட்பாடு’ குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
டோன்ரோ கோட்பாடு என்றால் அமெரிக்கக் கண்டத்திற்குள் பிற கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் உள்வரக்கூடாது.
வெனிசுலா இடதுசாரி கொள்கையை தழுவிய பின், ரஷ்யா, சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டத் தொடங்கியது.
இது முன்னர் அமெரிக்க அதிபர்களாக இருந்த எவருக்கும் பிடிக்கவில்லை தான். ஆனால், ட்ரம்ப் அளவிற்கு ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை. அதனால், வெனிசுலாவைக் கைப்பற்றுவதை ட்ரம்ப் செய்து காட்டியிருக்கிறார்.
ட்ரம்பின் இந்த நடவடிக்கை அவரது ‘அகண்ட அமெரிக்கா’ கனவைக் காட்டுகிறது.

