Last Updated:
பலர் அவசர சூழ்நிலைகளுக்கு உதவுமே என்ற எண்ணத்தில் தங்களுடைய பணத்தை ஃபிக்சட் டெபாசிட்களில் டெபாசிட் செய்கின்றனர்.
ஃபிக்சட் டெபாசிட்கள் என்பது வங்கிகள் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. பங்குச் சந்தைகளைப் போல அல்லாமல் ஃபிக்சட் டெபாசிட் என்பது முதலீட்டாளர்களுக்கு மெச்சூரிட்டியின் போது நிர்ணயிக்கப்பட்ட ஒரு ரிட்டனை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஃபிக்சட் டெபாசிட்கள் என்பது மிகவும் பிரபலமான முதலீட்டு ஆப்ஷனாக அமைகிறது.
பலர் அவசர சூழ்நிலைகளுக்கு உதவுமே என்ற எண்ணத்தில் தங்களுடைய பணத்தை ஃபிக்சட் டெபாசிட்களில் டெபாசிட் செய்கின்றனர். ஆனால், உண்மையில் ஒரு அவசரத்திற்காக ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணத்தை டெபாசிட் செய்வது நல்ல யோசனையாக இருக்குமா? சமீபத்தில் நிதின் கௌஷிக் என்ற சார்டட் அக்கவுண்டன்ட் ஃபிக்ஸட் டெபாசிட்களில் எமர்ஜென்சி ஃபண்டை சேமித்து வைப்பதால் ஏற்படக்கூடிய எதிர்பாராத பொருளாதார இழப்புகள் குறித்து பேசி இருக்கிறார். சமீபத்தில் ஒரு பெண் மருத்துவ அவசரத்திற்காக தன்னுடைய ஃபிக்சட் டெபாசிட் சேமிப்பில் இருந்த பணத்தை எடுக்க முயன்ற போது 25,000 ரூபாயை இழந்ததாக கௌஷிக் கூறியுள்ளார்.
அவரிடம் 4 ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகள் இருந்துள்ளது. அவை அனைத்துமே மெச்சூரிட்டி அடைவதற்கு கிட்டத்தட்ட 1.5 வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அந்தப் பெண்ணின் அப்பாவிற்கு அவசரமாக செய்யப்பட வேண்டிய ஒரு அறுவை சிகிச்சையின் காரணமாக பணத்தை புரட்டுவதற்கு அந்தப் பெண் தன்னுடைய ஃபிக்சட் டெபாசிட் பணத்தை முன்கூட்டியே எடுக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார். ஆனால், அவ்வாறு அவர் முன்னதாக பணத்தை வித்டிரா செய்வதால் ஏற்பட்ட செலவு என்பது கிட்டத்தட்ட 25,000 ரூபாயாக இருந்துள்ளது. பணத்தை முன்கூட்டியே செய்ததற்கான வட்டி விகிதங்கள், ஒப்பந்த விகிதத்தில் 0.5 – 1% சதவீத அபராதம் மற்றும் அடுத்த 2 வருடங்களில் கிடைக்கக்கூடிய கூட்டு வட்டி பலன் போன்றவை அவருக்கு சேர வேண்டிய பணத்தில் இருந்து கழிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, எப்பொழுதுமே அவசர சூழ்நிலைகளுக்கு உதவுமே என்பதற்காக ஃபிக்சட் டெபாசிட்களில் பணத்தை டெபாசிட் செய்வது நல்ல ஒரு யோசனையாக இருக்காது. தனியாக ஒரு சேமிப்பு கணக்கை துவங்கி 6 மாத செலவுகளை அந்த அக்கவுண்டில் முதலீடு செய்வது சிறந்த யோசனையாக இருக்கும். மேலும் மெடிக்கல் கிரெடிட் கார்டு அல்லது இன்சூரன்ஸ் டாப் அப் போன்றவற்றை ஒரு பேக்கப்பாக வைத்துக் கொள்ளலாம் என்றும் கௌஷிக் பரிந்துரை செய்கிறார். “எமர்ஜென்சி ஃபண்ட் என்பது உங்களுக்கு மன நிம்மதியை தரக்கூடிய ஒன்றே தவிர லாபத்துக்கானது அல்ல”, என்று கௌஷிக் கூறியுள்ளார். எனவே எமர்ஜென்சி ஃபண்ட் என்பது கூடுதல் இழப்புகளை ஏற்படுத்தாமல் எதிர்பாராத செலவுகளை சமாளிப்பது என்பது உங்களுடைய இலக்காக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
August 25, 2025 7:38 AM IST


