• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஃபிஃபா உலகக் கோப்பை : இந்திய அணியை ஏமாற்றி வென்ற கத்தார்

GenevaTimes by GenevaTimes
June 13, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஃபிஃபா உலகக் கோப்பை : இந்திய அணியை ஏமாற்றி வென்ற கத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஃபிஃபா உலகக் கோப்பை 2026ல் இடம்பெறுவதற்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் கத்தார் அணி இந்தியாவை ஏமாற்றி கோல் அடித்து வெற்றிபெற்றது. இதன் மூலம் இந்தியா வாய்ப்பை இழந்துள்ளது. 

ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஆசிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, தனது கடைசி ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் கத்தார் அணியை எதிர்கொண்டது.

போட்டியின் 37வது நிமிடத்தில் லல்லியன் சுவாலா சாங்டே முதல் கோலை அடித்து, இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் நடைபெற்றது. அதாவது, கோல் கீப்பர் பந்தை தடுத்தபோது, அது கோட்டுக்கு வெளியே சென்றுவிட்டது. ஆனால், அந்த பந்தை கத்தார் வீரர் அல் ஹசன் தள்ளிவிட, மற்றொரு வீரரான அய்மென் கோல் அடித்தார். அதன் பின்னர் 85 நிமிடத்தில், அகமது அல்ரவி மற்றொரு கோலை அடித்ததால், 2-1 என்ற கணக்கில் கத்தார் அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

விளம்பரம்

இதையும் படிங்க : IND vs USA : ஷிவம் துபேக்கு பதிலாக இந்திய அணியில் முக்கிய மாற்றம்? வானிலை, பிட்ச் ரிப்போர்ட் என்ன?

கால்பந்து விதியின் படி, ஒரு பந்து கோட்டுக்கு வெளியே சென்றுவிட்டால், அந்த பந்தை நடுவர் தான் எடுத்து, வீரர்களுக்கு புதிதாக வழங்க வேண்டும். ஆனால், கத்தார் அணி வீரர்கள் முதல் கோலின்போது திட்டமிட்டு இந்திய அணியை ஏமாற்றிவிட்டனர். கத்தார் வீரர்கள்தான் இப்படி இருந்தார்கள் என்றால், போட்டியின் நடுவரும் கத்தாருக்கு சாதகமாக நடந்து கொண்டார். அத்துடன், ரிவ்யூ பார்க்கும் VAR முறையை மூன்றாவது நடுவரும் பயன்படுத்தவில்லை.

விளம்பரம்

இதனால், ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது. இதையடுத்து, தவறு நடந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவிட்டு, இந்தியாவுக்கு நியாயம் வழங்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். அத்துடன், இந்த நூற்றாண்டில் இந்தியாவுக்கு எதிராக நடந்த மிகப்பெரிய கொள்ளை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

.

Read More

Previous Post

ராகுலுக்கு எதிரான விமா்சனம்: நியாயப்படுத்திய கேரள முதல்வா்

Next Post

சுங்கை பாக்காப் சட்டமன்ற தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் சார்பில் ஜொஹாரி அரிஃபின் போட்டி | Makkal Osai

Next Post
சுங்கை பாக்காப் சட்டமன்ற தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் சார்பில் ஜொஹாரி அரிஃபின் போட்டி | Makkal Osai

சுங்கை பாக்காப் சட்டமன்ற தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் சார்பில் ஜொஹாரி அரிஃபின் போட்டி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin