• Login
Wednesday, March 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஃபார்ம் அவுட் வீரர்களுக்கு இடமில்லை.. அரையிறுதி போட்டியில் இந்திய அணி எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
March 4, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஃபார்ம் அவுட் வீரர்களுக்கு இடமில்லை.. அரையிறுதி போட்டியில் இந்திய அணி எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 04, 2026 7:28 PM IST

சிவம் துபே 6-வது பந்துவீச்சாளராகச் சரியாகச் செயல்படாததும், ஃபீல்டிங்கில் கேட்ச்களைத் தவறவிடுவதும் இந்தியாவுக்குப் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.

பயிற்சியின்போது இந்திய அணி வீரர்கள்
பயிற்சியின்போது இந்திய அணி வீரர்கள்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றில் நாளை இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. இதையொட்டி அணியில் முக்கிய மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து அணியோ பாகிஸ்தான் மற்றும் இலங்கையை வீழ்த்தி மிகுந்த உத்வேகத்துடன் உள்ளது. கடந்த இரண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதிகளிலும் இவ்விரு அணிகளே மோதிக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அபிஷேக் சர்மா, இந்த உலகக் கோப்பையில் ஃபார்ம் அவுட்டில் இருப்பது இந்திய அணிக்கு பெரும் கவலை அளிக்கிறது. 6 இன்னிங்ஸ்களில் வெறும் 80 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர், மூன்று முறை டக்-அவுட் ஆகியுள்ளார்.

ஜிம்பாப்வேக்கு எதிராக அரைசதம் கடந்தாலும், முக்கியமான போட்டிகளில் சொதப்புவது அவர் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், 2025-ல் இங்கிலாந்துக்கு எதிராக இதே வான்கேடே மைதானத்தில் அவர் அதிகபட்ச ரன்களைக் குவித்து சாதனை படைத்தவர் என்பதால், அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம். ஒருவேளை மாற்றம் செய்யப்பட்டால், இஷான் கிஷன் மீண்டும் தொடக்க வீரராகக் களமிறங்க வாய்ப்புள்ளது.

இந்திய அணியின் பந்துவீச்சு சமீபத்திய போட்டிகளில் ரன்களை வாரி வழங்கியுள்ளது. நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக 180 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 195 ரன்களைக் கொடுத்தது.

இதனால் குல்தீப் யாதவ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், குல்தீப்பைச் சேர்க்க வேண்டுமானால் அக்சர் படேலை நீக்க வேண்டியிருக்கும், இது பேட்டிங் பலத்தைக் குறைக்கும். மேலும், சிவம் துபே 6-வது பந்துவீச்சாளராகச் சரியாகச் செயல்படாததும், ஃபீல்டிங்கில் கேட்ச்களைத் தவறவிடுவதும் இந்தியாவுக்குப் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

ஈரானுக்கு சிறிதும் அஞ்சாமல் இஸ்ரேல் செய்யும் காரியம்! பணயம் வைக்கப்படும் உயிர்கள்

Next Post

Israel – Iran War | வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் எத்தனை பேர்…? அவர்களின் நிலை என்ன…?

Next Post
Israel – Iran War | வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் எத்தனை பேர்…? அவர்களின் நிலை என்ன…?

Israel - Iran War | வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் எத்தனை பேர்...? அவர்களின் நிலை என்ன...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin