கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகல்இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளார்.
உருத்திரபுரத்தில் இருந்து கரடிபோக்கு நோக்கி மோட்டார் சைக்கிளில் தனது மகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு ஏற்றிச் செல்ல பயணித்த போது கரடி போக்கிலிருந்து உருத்திரபுரம் நோக்கி வீதியில் மிக வேகமாக மோட்டார்
சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வேகமாக திரிந்த இளைஞர்களால் விபத்து
சம்பவ இடத்திலேயே இளம் தாய் பலியாகியுள்ளார்.
இளைஞர்கள் தங்களது பெரியளவிலான மோட்டார் சைக்கிளில் வீதியில் வேகமாக ஓடித்திரிந்ததாக சம்பவத்தை அவதானித்த பொது மக்கள்
குறிப்பிட்டனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவனும் காயமடைந்துள்ளான். சம்பவம்
தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

