சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் (Sri Vairavimada Kaliamman Temple) ஸ்ரீ நவாக்ஷரி லட்ச ஜப மஹா யாகம் (Sri Navakshari Laksha Japa Maha Yaagam) நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) அறிவித்துள்ளது.
விமான நிலையத்தின் கழிவறையில் கிடந்த தங்க பேஸ்ட்…..சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!
இது தொடர்பாக இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் இன்று (மார்ச் 10) முதல் மார்ச் 17- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு வாரக் காலத்திற்கு ஸ்ரீ நவாக்ஷரி லட்ச ஜப மஹா யாகம் நடைபெறும்.

மஹா சிவராத்திரியையொட்டி, ஸ்ரீ சிவன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது!
நாள்தோறும் காளியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்படும். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். பூஜைகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு காளியம்மன் அருளைப் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது”. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.