மாசி மாத விநாயகர் சதுர்த்தியையொட்டி, சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கட்டுமான தளத்தில் வாகனம் மோதி வெளிநாட்டு ஊழியர் மரணம் – தரையில் குந்தியிருந்தவருக்கு நேர்ந்த சோகம்
சிங்கப்பூரில் உள்ள சிலோன் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம். மாசி மாத விநாயகர் சதுர்த்தியையொட்டி, வரும் மார்ச் 13- ஆம் தேதி புதன்கிழமை அன்று மாலை 05.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது. மாலை 05.30 மணிக்கு சங்கல்ப்பமும், விநாயகருக்கு விசேஷ பூஜையும், இரவு 07.00 மணிக்கு மூலஸ்தான விசேட பூஜையும், இரவு 07.30 மணிக்கு வசந்த மண்டப பூஜையும், விநாயகப் பெருமான் திருவீதி உலாவும், இரவு 09.00 அர்த்தசாமப் பூஜையும், அதைத் தொடர்ந்து பிரசாதமும் வழங்கப்படும்.
இந்த நாளில் பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகைத் தந்து விநாயகரை தரிசனம் செய்து பிரசாதத்தைப் பெற்றுச் செல்லுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.