ஸ்காட்லாந்த்: விறுவிறுப்பான வாக்களிப்பு – காணொளி
ஸ்காட்லாந்து தொடர்ந்தும் ஐக்கிய ராஜ்ஜியத்துடன் இருக்க வேண்டுமா, இல்லையா என்பதை நிர்ணயிப்பதற்கான வாக்கெடுப்பில் மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஸ்காட்லாந்தின் சரித்திரத்தில் இது ஒரு மாபெரும் வாக்கெடுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சுமார் 43 லட்சம் மக்கள் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இன்றைய வாக்குப்பதிவு குறித்து பிபிசியின் டானியல் போயிட்சரின் காணொளி.