அலெக்ஸ் சால்மண்ட்
பிரிட்டனிடமிருந்து பிரிந்து செல்லவேண்டும் என்பதற்கான தனது முயற்சிக்கு நடந்து முடிந்த பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் தோல்வி கிடைத்திருப்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக ஸ்காட்லாந்தின் முதலமைச்சர் அலெக்ஸ் சால்மண்ட் தெரிவித்திருக்கிறார்.
அதேசமயம், ஸ்காட்லாந்தின் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்த சுமார் 16 லட்சம் வாக்காளர்கள், எதிர்காலத்தில் ஸ்காட்லாந்தின் சுதந்திரத்திற்கான வலுவான அடித்தளமாக அமைவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஸ்காட்லாந்த் வாக்காளர்கள் பிரிவினைக்கு எதிராக வாக்களித்தால் ஸ்காட்லாந்துக்கு மேலதிகமாக கூடுதல் அதிகாரங்களை அளிப்போம் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதியளித்திருக்கும் பிரிட்டனின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளும் தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.