எக்ஸ் தளத்தில் ஸ்விஃப்ட்டின் பெயரைத் தேடினால், `Something went wrong. Try reloading’ என்று வருகிறது. பாடகியின் பாதுகாப்பிற்காக இந்தத் தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.
இது குறித்து எலானின் எக்ஸ் நிறுவனம் முன்பு வெளியிட்டு இருந்த அறிக்கையில், “இது போன்ற பதிவுகளுக்கு நிறுவனம் ஜீரோ டாலரன்ஸை கொண்டுள்ளது. எங்களின் குழுக்கள் அடையாளம் காணப்பட்ட அனைத்துப் படங்களையும் அகற்றி, அவற்றை போஸ்ட் செய்த அக்கவுன்ட்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றன’’ என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த வாரம் ஸ்விஃப்ட்டின் போலியான புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட டீப் ஃபேக்குகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான சட்டம் இயற்றப்படவேண்டிய கட்டாயத்தை அமெரிக்க அரசு முன்வைத்துள்ளது.
ஏஐ-ன் பயன்பாடு ஆபத்தானதா அல்லது பயனுள்ளதா… உங்களின் கருத்தென்ன?!