வழக்குகளில் தேடப்பட்டு வரும் வெளிநாட்டவர் சிங்கப்பூருக்குள் வந்தால் சிங்கப்பூர் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி நமக்குள் இருக்கும்.
வெளிநாட்டவர் குறித்து அவரின் சொந்த நாட்டு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தால் சட்டத்தின் அடிப்படையில் சிங்கப்பூர் உரிய நடவடிக்கையை எடுக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
சட்டபூர்வமான பயண ஆவணங்களுடன் சிங்கப்பூருக்குள் வரும் வெளிநாட்டவர்கள் இங்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், நாட்டின் நலன்களை அடிப்படையாக கொண்டு வெளிநாட்டவரின் அனுமதியை மறுக்கும் உரிமையும் சிங்கப்பூருக்கு உண்டு என அமைச்சர் க. சண்முகம் முன்னர் கூறினார்.
வெளிநாட்டு அரசாங்கத்தால் தேடப்படும் நபர் சிங்கப்பூர் வழியாக பயணம் செய்வதற்கு அனுமதிப்பது குறித்த நாட்டின் கொள்கை குறித்து முன்னர் கேள்வி எழுந்தது.
அதற்கு, சிங்கப்பூருக்குள் வந்த வெளிநாட்டவரை அவரின் சொந்த நாட்டு அரசாங்கம் தேடினாலும், அது குறித்து அந்தநாடு வேண்டுகோள் விடுத்தாலும் சட்டத்தின் அடிப்படையில் சிங்கப்பூர் உரிய நடவடிக்கையை எடுக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் ஜூரோங்கில் உள்ள தொழிற்சாலையை மூடவுள்ள நிறுவனம் – 300 ஊழியர்களுக்கு வேலை இல்லை