பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி மற்றும் ப்ராஜெக்ட் பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியாளர் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.383/hr/ns(s&cs)
பணி: Trainee Engineer-I
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ. 30,000 – 40,000
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கணி அறிவியல் போன்ற பிரிவுகள் ஏதாவதொன்றில் பட்டம் பெற்றிருப்பதுடன் குறைந்தது 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Engineer-I
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.40,000 – 55,000
வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன், கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கணி அறிவியல் போன்ற பிரிவுகள் ஏதாவதொன்றில் பட்டம் பெற்றிருப்பதுடன் குறைந்தது 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 23.3.2024