இந்தியாவில் மிக குறைந்த வயதில் பணக்காரர் ஆகியுள்ளது 4 மாத குழந்தை. இதன் பின்னணி குறித்த தகவல்கள் வியப்பை ஏற்படுத்தி வருகிறது.
பிரபல மென் பொருள் சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ்-இன் தலைவராக இருப்பவர் நாராயண மூர்த்தி. 77 வயதாகும் இவருக்கு சுதா மூர்த்தி என்ற மனைவியும் அக்சரா என்ற மகளும், ரோகன் என்ற மகளும் உள்ளனர்.
மகள் அக்சராவை திருமணம் முடித்துள்ள ரிஷி சுனாக் தான் தற்போது பிரிட்டனின் பிரதமராக உள்ளார். நாராயண மூர்த்தியின் மகன் ரோகன் மூர்த்திக்கு 4 மாதத்திற்கு முன்பாக இகாக்ரா என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில இகாக்ராவுக்கு ரூ. 240 கோடிக்கான சொத்துகளை நாராயண மூர்த்தி பரிசாக அளித்துள்ளர்.
அதாவது தனது சொத்துக்களில் பல்வேறு விதமான பங்குகளை பேரனுக்கு வழங்கியதன் மூலம் அவருக்கு ரூ. 240 கோடி அளவுக்கு சொத்துகள் பரிசளிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் வர்த்தக உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாராயண மூர்த்தியின் மகன் ரோகன் மூர்த்தி, அபர்னா கிருஷ்ணன் என்பவரை திருமணம் முடித்திருந்தார். இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு இகாக்ரா என பெற்றோர் பெயர் வைத்திருந்தனர். இது நாராயண மூர்த்திக்கு 3 ஆவது பேரப்பிள்ளையாகும். தனது மகள் அக்சரா மூலமாக 2 பெண் குழந்தைகளுக்கு ஏற்கனவே தாத்தா ஆகியிருந்தார் நாராயண மூர்த்தி.
இகாக்ரா என்ற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து பெறப்பட்டதாகும். இதற்கு உறுதி மற்றும் இலக்கு என்று பொருள் உள்ளது. 1981 ஆம் ஆண்டு 250 டாலர்களில் ஆரம்பிக்கப்பட்ட இன்போசிஸ் நிறுவனம் இன்று இந்தியாவில் மிகவும் மதிக்கத்தக்க நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
25 ஆண்டுகளுக்கும் மேலாக அதன் தலைவராக இருந்து வந்த நாராயண மூர்த்தி 2021 டிசம்பரில் ஓய்வு பெற்றார். அவரது மனைவியான சுதா மூர்த்தி சமீபத்தில்தான் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…