16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் அகமதாபாத்தில் மார்ச் 31ந் தேதி தொடங்கியது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது இடத்தில் உள்ளது.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் அகமதாபாத்தில் மார்ச் 31ந் தேதி தொடங்கியது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது இடத்தில் உள்ளது.
அகமதாபாத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்சிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்து இருந்தது. பஞ்சாப்பிடம் 4 விக்கெட்டில் தோல்வியை தழுவியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 11- வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையி லான மும்பை இந்தியன்சை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடி யத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.
இந்த சீசனில் சேப்பாக்கத்தில் 2 ஆட்டத்தில் சி.எஸ்.கே. வெற்றி பெற்றது. இரண்டு போட்டியில் தோற்றது. மும்பையை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 6 -வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தை பொறுத்தவரை மும்பை அணியே ஆதிக்கம் செலுத்தி உள்ளது. அந்த அணி 5 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.
சென்னை அணியின் தொடக்க வீரர்களான கான்வே (414 ரன்), ருதுராஜ் கெயக்வாட் (354 ரன்) ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.
சென்னை அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் பலம் பெற்று திகழ்கிறது. ஆனால் பந்து வீச்சில் பலவீனமாக இருக்கிறது. இதனால் பந்து வீச்சில் முன்னேற்றம் காணுவது முக்கியமானதாகும்.
மும்பை இந்தியன்ஸ் 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி மும்பை வான்கடே மைதானத்தில் தோற்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சி.எஸ்.கே.வை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறது.
ஐ.பி.எல். போட்டியை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் பரம்பரை எதிரிகள் ஆகும். இதனால் இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் இதுவரை 35 முறை மோதி சி.எஸ்.எஸ். 15 முறையும், மும்பை இந்தியன்ஸ் 20 தடவையும் வெற்றி பெற்றுள்ளன.
காலை 10 மணியளவில் இருந்தே சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு ரசிகர்கள் குவிய தொடங்கினர். நேரம் செல்ல செல்ல ரசிகர்கள் அதிக அளவில் திரண்டனர். வேறுஎந்த போட்டியையும் விட இன்றையப் போட்டிக்கு ரசிகர்களின் ஆர்வம் மிகவும் அதிக அளவில் இருந்தது.
ரசிகர்கள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். டிக்கெட் இல்லாத ரசிகர்கள் தங்களுக்கு டிக்கெட் கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் மைதானத்தைச் சுற்றி வலம் வந்தனர்.
சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.